அம்பானியின் Brush??

164 28 23
                                    

அந்த பல்-அ இன்னும் எவ்ளோ நேரம்டி விளக்குவ..

இரு..

சீக்கிரம்.. தேஞ்சிற போது..

விளக்கியாச்சு..

ஒரு வழியா..

அப்பா, அம்பானியோடது என்ன பிரஷ்..

என்ன??😳

அம்பானி பா - அம்பானி..

எல்லார் பிரஷ் மாதிரி தான் இருக்கும்..

கோல்கேட் பிரஷா..

அவன் ஏன்டி அதெல்லாம் வாங்க போறான்..

அப்போ பெப்சோடென்ட் ஆ..

ஹும்.. சென்சோடைன்😏

சொல்லுப்பாஆஆ..

ஏன்டி கத்தற..

சொல்லு..

என்ன சொல்லனும்..

அம்பானி என்ன பிரஷ்ல பல்லு விளக்குவாரு..

அடியே.. உன் பிள்ளைக்கு அறிவு கம்மி கம்மினு சொல்லுவியே.. இவ வயசுக்கு என்ன கேள்வி கேக்கறா பாரு🤭

அம்மாவ எதுக்கு கூப்பிடற.. பதில் சொல்லு..

அத தெரிஞ்சிட்டு என்ன பண்ண போறே..

என்னவோ பண்றேன்.. நீ சொல்லு..

கூகுள்-ல தேடு.. தெரியும்..

அப்ப உனக்கு தெரியாதா🙄

இருக்கற வேலைல இதெல்லாம் எங்க யோசிக்க..

டிவி பாக்ற அப்ப யோசிக்க வேண்டியது தான..

ஆத்தா எனக்கு தெரியல, நீ கூகுளயே கேளு..

ஹூம்ம்..

.
.
.

அப்பா..

என்ன பிரஷ் ஆம்..

இதுல வரல..

நல்ல தேடிப்பாரு..

வரலப்பா..

ஷப்பா.. இப்ப தெரிஞ்சே ஆனுமா..

ஆமாஆஆஆஆ...

சரி கத்தாத.. அந்த போன்-அ குடு..

'World's costliest tooth brush'

அத ஏன் தேட்ற..

அத தான் அவன் யூஸ் பண்ணுவான்..

நீ பாத்தியா😳

😵

சொல்லு நீ பாத்தியா🧐

'Oral B- 10000n-Black- 22066"

இன்னுமா தேட்ற..

22066 ருவாயா🤯

'அந்த காசுக்கு நம்ம ஆயுசு முழுக்க பல் தேக்கலாமே', சமையலறையிலிருந்து ஒரு குரல்..

அது உண்மை தான்.. தலையே சுத்துது😵

இந்த பிரஷ்லயா விளக்குவாங்க..

அவன் விளக்க தேவையில்ல, சும்மா பல்லுல வெச்சா அதுவே விளக்கி விட்றும் போல..

என்னது அதுவே விளக்கி விட்றுமா😱

ஹூம்.. வேக்கம் க்ளீனர் மாரி..

அப்படியா😳

இதுல அப்படிதான் போட்ருக்கு..

நம்மலாட்டம் அவங்களும் மாசம் மாசம் புதுசா வாங்குவாங்களா🤔

அவன் கிட்ட இருக்க காசுக்கு தினம் ஒன்று வாங்கலாம்..

தினைக்குமா..

ஹூம்.. பல்லு விலக்கற பிரஷ்க்கு கூட சார்ஜ் போட முடியும்-னு எனக்கே இன்னிக்கு தான் தெரியும்..

அய்யோ.. சார்ஜா.. போன் மாரியா😱

ஹூம்..

அப்போ தண்ணில வாய் கொப்பளிச்சா ஷாக் அடிக்காதா🤯🤯

ஹாஹாஹாஹா😂😂

சொல்லு..

தெரிலயே🤭

வாய்ல ஷாக் அடிச்சா.. அய்யோ.. ரொம்ப ரொம்ப வலிக்குமே😰

ஹாஹா.. ஆமால..

அதுக்கு அவர் கோல்கேட் லயே விளக்கலாம்.. இனிப்பா இருக்கும்😋😁

தங்கமே.. தங்கமே🥰😘

எனக்கு அந்த பிரஷ் வேணாம்பா.. பயமா இருக்கு..

ஓகே.. அடுத்த மாசம் உனக்கு.. கோல்கேட் பிரஷ் கோல்கேட் பேஸ்ட்😎😎

ஹய்யா🥳🥳

சரி.. இப்ப போ.. போய் சாப்பிடு..

சிறு கதைகள்..Where stories live. Discover now