சிவகீதை : 12

18 1 0
                                    

அறிந்துகொள்வாய் ரகுநந்தா...!

இருதயத்தின் நடுவில் மிக சூக்ஷுமனும் விஸ்வ வியாபகனும் எல்லோராலும் அடையப்படுவோனும் வைஸ்வாநரனுமாய்த் தன்னிடம் இருப்பவனுமாகிய என்னை எந்த தீரர்கள் காண்கின்றனரோ அவர்களிற்கே எப்பொழுதும் சாந்திகிட்டுகின்றது, மற்றவர்க்கல்ல.

யான் ஒருவனே காரணந்தோறும் அதிஷ்டித்திருக்கின்றேன். ஐம்பூதமாகிய இவையனைத்தும் என்னாலேயே வியாபிக்கப்பட்டுள்ளது. புருஷரூபமாய் விலாஸஞ்செய்வோணும் ஈசானனுமாகிய என்னை இவ்வாறு விசாரித்துப் பரமசாந்தியை அடைகின்றான்.

யாதொருவனை ப்ராணன்களிற்கும் மனதிற்கும் உள்ளில் சூக்ஷுமமாய் இருக்கின்றவனென்று கூறுகின்றனரோ, எவனிடம் பசியும்(போஜன விருப்பம்) தாகமும்(தீர்த்த பாண இச்சை) கோபமும்(பொறுமையின்மை) இருக்கின்றனவோ, ஹேது ஜாலங்களிற்கு மூலமாகிய அவனது ஆசையை ஒழித்து என்னிடம் புத்தியால் மனதை நிறுத்தி இவ்வாறு எவர் என்னை தியானிக்கின்றனரோ உபாஸிக்கின்றனரோ அவர்களிற்கே சாஷ்வதமாகிய சாந்திகிட்டும், ஏனையவர்க்கல்ல.

வாக்கும் மனமும் எவனையடைய முடியாமல் தவிக்கின்றனவோ அப்படிப்பட்ட ஆனந்த ஸ்வரூபமாகிய பிரம்மமாயுள்ள என்னைத் தியானிப்பவன் எக்காரணத்தாலும் #பயப்படுவதில்லை.

சிரேஷ்டமும் கைவல்ய ஞானஹேதுவுமாகிய இவ்விதமான எனது வாக்கியத்தைக் கேட்டு தேவர்கள் எனது நாமங்களை ஜபிக்கின்றவர்களாகவும், என்னை தியானித்தலையே முக்கியமாய்க் கொண்டவர்களாகவும் இருந்தனர்.

அவர்களெல்லோரும் எனது ஸாயுஜ்யத்தை அடைந்தனர். ஆதலால் #காணப்படும் #பதார்த்தங்களெல்லாம் #எனது #விபூதிகளே.

ஸகலமும் என்னிடம் தோன்றி என்னிடம் நின்று என்னிடமே ஒடுங்குகின்றன. ஆதலால் நான் அத்வமயமாகிய பிரம்மமாகின்றேன்.

அணுவிலும் அணுவும் மஹானும் ஸகலமும் மிக்க சுத்தனும் புராதனனாகிய புருஷனும் ஈசனும் பொன்மயனும் சிவரூபனும் யானேயாகின்றேன்.

தொடரும்...

🌷🌷🌷சர்வம் சிவார்ப்பணம்🌷🌷🌷

சிவகீதை (சம்பூர்ணம்)Where stories live. Discover now