சிவகீதை : 03

47 1 0
                                    

சிவ கீதை :- 03
🔥🔥🔥🔥🔥

|| கோடி ஜன்மார்ஜிதை: புண்யை: சிவே பக்தி: ப்ரஜாயதே||
"பல கோடி ஜென்மங்களில் சம்பாதிக்கப்பட்ட புண்ணியங்களாலேயே ஒருவருக்கு சிவ பக்தி ஏற்படுகின்றது."

இப்பேற்பட்ட அரிய வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. உலகின் எவ்வளவோ பாகங்களில் எத்தனையோ கோடி மக்கள் வாழும்போது   எம்பெருமான் பற்றி அறியும் வாய்ப்புக் கிட்டியதும், சனாதன தர்மத்தை சேர்ந்தவராய் நாம் பிறந்ததும் நிச்சயம் பெரும் பாக்கியமே ஆகும்.

இத்தகைய பாக்கியம் கிட்டியும் அதை நழுவவிடாமல் மேலும் பெருக்கிக் கொள்வது எப்படி? தேவ மாயையை வென்று சிவ பக்தியில் நிலைத்திருக்க என்னதான் செய்ய வேண்டும்?

எம்மிலும் மேலான சக்திகளைக் கொண்ட தேவர்களின் சோதனைகள் எம்மை அணுகாது இருக்க வேண்டுமெனின் சுயநலம் எனும் எண்ணத்தைத் துறந்து ஏனைய உயிர்களும் நலம் பெறும் நோக்கில் பொது நல எண்ணம் கொண்டு "மக்கள்   சேவையே மகேஷன் சேவை"யென செயற்பட வேண்டும். அவ்வாறு நாம் ஆற்றும் அனைத்துக் காரியங்களையும் "சிவார்ப்பணம்" என எண்ணி சர்வேஷ்வரரின் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும். அவ் வகையில் பற்றின்றி பரமனிற்கு பலன்களை அர்ப்பித்து நாம் நம் கர்மங்களில் ஈடுபடும் போது சிவனார் அருளிற்குப் பாத்திரமானவர்களாக மாறுகின்றோம். பரத்திற்கும் பரமான பராபரனுடைய அருளைப் பெற்றவரை சோதிப்பதற்கென்ன, அவருக்குத் துன்பம் விளைவிக்கும் ஒரு செயல் செய்யக் கூட தேவர்கள் அஞ்சுவர்.

|| இஷ்டா பூர்த்தானி கர்மானி தேனசரதி மானவ:

சிவார்ப்பண தியா காமான் பரித்யஜ்ய யதாவிதி

அனுக்ரஹாத் தேன சம்போ: ஜாயதே ஸுத்ருடோ நர:

ததோ பீதா: பலாயந்தே விக்னம் ஹித்வா ஸுரேச்வரா: ||

"தனக்கென எப்பயனும் எதிர்பாராமல் #சிவார்ப்பணம் எனக்கொண்டு; விதிப்படி, லோக நன்மைக்காக சிவபரமான வேள்விகள் செய்வித்தல்( கிணறு, குளம்  மற்றும் நீராதாரங்கள் நிறுவுதல், கல்வி, சுகாதாரம், சாலைப் போக்குவரத்து மற்றும் மரம் வளர்த்தல் போன்ற காரியங்கள்) மூலம் சிவ ஞானம் அடைந்து, சிவானுக்ரஹத்தால் திட சித்தம் பெறுவதன் பயனாக, இந்திராதி தேவர்கள் பயந்தவர்களாய்; இடையூறு செய்வதைத் தவிர்த்து, அவரவர் வழியில் அமரர்கள் சென்றுவிடுகின்றனர்" என்று வேத வியாசர் வழங்கிய ஞானத்தை ஸூத மாமுனிவர் நைமிசாரண்யத்தில் ரிஷிகள் முன் எடுத்துரைத்தார்.

சிவகீதை (சம்பூர்ணம்)حيث تعيش القصص. اكتشف الآن