வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு

4.3K 60 46
                                    

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு அழகிய கிராமம் .

தேவதர்சினி அந்த அதிகாலை நேரத்தில் அந்த தையல் மிஷினில் உட்கார்ந்து தைத்து கொண்டு இருந்தாள். மணி 4 தான் ஆகி இருந்தது. அவள் இவ்வளவு காலையில் தைக்க காரணம் இருந்தது.

அவளுடைய சித்திதான் பக்கத்து வீட்டுகாரர்கள் அவசரம் என்று சொன்னதால் அவர்களிடம் தேவதர்சினி துணி தைத்து தருவாள் ஆனால் ஒவ்வொரு துணிக்கும் கூடுதல் 50 ரூபாய் தரவேண்டும் என்று சொல்லி நேற்று இரவு துணியை வாங்கி கொண்டு வந்து கொடுத்தார். தேவாவால் பேச முடியாது என்பதால் மட்டும் அல்ல அவளுக்கு அவள் சித்தியை பார்த்தாலே பயம் என்பதால் அவர் சொன்னபடி நேற்று இரவில் இருந்து தைத்து கொண்டு இருந்தாள்.

கால் வேறு வலித்தது அவளுக்கு வலியில் அழுகை வந்தது. இருந்தாலும் அழுதால் சித்தி புவனாவிடம் அதற்கும் திட்டு வாங்க வேண்டும் என்பதால் பல்லை கடித்து கொண்டு துணியை தைத்து கொண்டு இருந்தாள்.ஒரு வழியாக ஆறுமணி ஆனபோது அவள் தைத்து முடித்தாள். அவளால் நிற்க கூட முடியவில்லை. துணியை எல்லாம் மடித்து வைத்தவள் ஒரு மணிநேரம் அப்படியே கண் அசந்தாள்.

ஒரு மணிநேரத்திற்கு பிறகு வந்த புவனா அவள் எல்லா துணியும் தைத்து வைத்து இருப்பதை பார்த்து கொஞ்சம் மகிழ்ந்து விட்டு அவளை எழுப்பி விட்டார்

என்னட்டி எல்லா சோலி(வேலை )யும் முடிச்சிட்டியோ. என்னட்டி உறக்கம் உனக்கு. இங்கேரு மெட்ராஸ்ல இருந்து இண்ணைக்கு பூஜாகுட்டி வர்றா. நான் போய் இறைச்சி எடுக்க அந்த மகேஷ்கிட்ட குடுத்துட்டு வாறேன். நீ வீடை எல்லாம் தூத்துவை (பெருக்கிவை )பாத்திரம் எல்லாம் (மழக்கி )கழுவி வை. தோசை மாவு பூஜாக்கு மட்டும் தான் இருக்கு நீ நேத்து வெள்ளம் வீத்தி போட்ட பழஞ்சி குடி என்னா. என்று சொன்னவர் அவள் தைத்த துணியை கையில் எடுத்து கொண்டு ஒரு சோலி செய்ய வேண்டாம் உறக்கம் மட்டும் போதும் என்று அவளை திட்டி விட்டு சென்றார்.

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]Where stories live. Discover now