வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -42

646 31 23
                                    

❤️சகியே நீயாரடி
கை தீண்டும் பௌர்ணமி
கொஞ்சம் நில்லு
பெண்ணே பெண்ணே
உந்தன் கையில் நானும்
கூடும் நேரம் விட்டு செல்லாதே
கண்ணே கண்ணே
நீளும் காலம் வேண்டும்
வாராயோ அருகிலே அடியே❤️






தேவா கிச்சனில் இருக்க அவளை நோக்கி வந்த புவனா .

"என்ன தேவா உனக்க வீட்டாளு ரொம்ப கோவமா போற மாதிரி இருக்கு ...அந்த வீட்ல ஏதாவது பிரச்னையா ?",என்று கேட்டார் .தேவாக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை .அவள் இல்லை என்பது போல தலை அசைத்தாள் .

"ஒரு பிரச்சனையும் இல்லாமதான் உனக்க வீட்டாளு இந்த அளவுக்கு கோப படுறாரா .அப்படி எல்லாம் இருக்காது . இங்க பாரு தேவா பக்கத்துல இருக்கவங்களுக்கு எல்லாம் நம்ம நேரத்தை எடுத்து அவங்க பிரச்சனையை சரி பண்ண போனா அது நமக்குதான் பிரச்னையை கொடுக்கும் புரியுதா ?",என்று சொன்னார் புவனா .அவர் சொன்னதை கேட்ட தேவா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க அப்போது சூர்யா வரும் சத்தம் கேட்டது .உடனே பேச்சை மாற்றியவர் .

"போ தேவா போய் அவங்களுக்கு சாப்பாடு கொடு", என்று சொன்னாள் .தேவா சூர்யாவை சென்று பார்க்க அவன் கண்களாலேயே ஒரு பிரச்சனையும் இல்லை என்பது போல தலை அசைத்தான் தேவா லேசாக புன்னகை செய்தாள் .

"தேவா எனக்கு வேலைக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன் .இன்னைக்கு வர கொஞ்சம் லேட் ஆகும்", என்று சொன்னான் .அவன் சொன்னதை கேட்ட தேவா சரி என்பது போல தலை அசைத்தாள்.சூர்யா வேலைக்கு சென்றுவிட செல்வம் மற்றும் கிருஷ்ணா இருவரும் அவர்கள் லஞ்ச் எடுத்துக்கொண்டு வேலைக்கு சென்றனர் இதை எல்லாம் பார்க்கவே புவனாக்கு ஆத்திரமாக இருந்தது .அவர் தேவாவை எந்த அளவுக்கு கொடுமை படுத்தினாரோ அந்த அளவுக்கு தேவா இங்கே நிம்மதியாக இருந்தாள். எல்லோரும் சென்றபிறகு குளித்துவிட்டு வந்த புவனா சாப்பிட உட்கார்ந்தார் .தேவாதான் அவருக்கு சாப்பாடு பரிமாறினாள் .அப்போது அங்கே சஞ்சனாவும் அமிர்தாவும் வந்தார்கள் . சூர்யா புவனா வந்ததை பற்றி அவர்களிடம் சொல்லி இருக்கவில்லை .அதனால் வீட்டில் புதிதாக வந்திருக்கும் நபரை பார்த்து அமிர்தா கொஞ்சம் குளம்பினாள் .

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]Where stories live. Discover now