வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -49

761 33 12
                                    

😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊மார்பின் மேலே உன்னை சாய்த்து
கதைகள் சொன்ன தருணங்கள்
வார்த்தை எல்லாம் ஓய்வு கொள்ள
மௌனம் பேசும் பொழுதுகள்

விண்மீன் வெளிச்சத்தில் உன்னோடு
எல்லை மீறிய காலம்
எண்ணும் போதே ஏன் இந்த
நெஞ்சம் போடுது தாளம்
எங்கே நீயோ அங்கே நானும்
வேண்டும் என்று தோன்றுதே

வா வா அருகே வா வா கனவே

   😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

தேவாவை சூர்யா அணைப்பிலிருந்து விலக்கவே இல்லை தேவாவும் விலக விருப்பம் கொல்லவில்லை. கொஞ்சம் நேரம் சென்ற பிறகு அவளைவிட்டு பிரிந்து நின்ற சூர்யா..

"ஹே தேவா நீ என்ன இப்படியே நின்னுட்டு இருக்க உனக்கு பசிக்கலயா", என்று கேட்டான். தேவா பசிக்கிறது என்று சைகையால்  சொன்னாள் .

"பசியை வச்சிட்டு நீ என்ன பண்ணிட்டு இருக்க.இப்போ நீ நம்ம பாப்பாக்கும் சேர்த்து சாப்பிடணும்", என்று சொன்னவன் அவளை தன்னுடன் ஹாலுக்கு அழைத்து சென்று அமர வைத்துவிட்டு சாப்பாடு எடுத்து வந்தான். சூர்யா சமையல் நன்றாகதான் இருக்கும்.அதுவும் தேவாக்கு வேறு பசி அதிகம் எடுத்தது அதனால் அவள் ரசித்து ருசித்து சாப்பிட ஆரம்பித்தாள்.

சூர்யா அவளையே பார்த்து கொண்டிருந்தான். ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாள் விறைப்பாக தன்னுடைய வாழ்வில் தான் மட்டும் இருந்தால் போதும் வேறு யாரும் வேண்டாம் என்று இருந்த சூர்யாவின் அனைத்துமாகி விட்டாள் தேவா.

இப்போது அவர்கள் வாழ்க்கையிலும் குழந்தை ஒன்று வர போகிறது. தேவாவும் அவளுக்கு இப்படி ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும் என்று ஒரு வருடத்துக்கு முன்பு நினைத்திருக்க மாட்டாள் ஆனால் இப்போது அவளுக்கும் வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக செல்கிறது.

வாழ்க்கை எப்போதும் அப்படித்தான் இன்பத்தையும் துன்பத்தையும் மாற்றி மாற்றி கொடுக்கும் நாம்தான் அதை சரியாக கடந்து செல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]Where stories live. Discover now