வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -16

1K 48 21
                                    

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி பாா்த்துக்
கொண்டே பிாிந்திருந்தோம்
சோ்த்து வைக்க காத்திருந்தோம்

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

பூஜா மற்றும் சத்யா இருவரும் எதிரெதிர் பக்கம் அமர்ந்திருந்தார்கள் .சத்யா பதட்டமாக இருந்தான்  பூஜா கோபமாக இருந்தாள் .அவர்கள் இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருக்க அவர்கள் நடுவில் பிளாக் பாரஸ்ட் கேக் என்னை இப்போது சாப்பிடுவீர்களா இல்லையா என்பது போல காத்திருந்தது .அவர்கள் இருவருக்கும் நடுவில் இருந்த மௌனத்தை  கலைத்து முதலில் சத்யாதான் பேசினான் .

பூஜா நான் பேசுற விஷயத்தை  நீங்க கொஞ்சம் கூட கோப படாம பொறுமையா கேக்கணும் என்று சொன்னான் சத்யா .கண்ணில் மொத்த கோபத்தையும் காண்பித்து  விட்டு அவனை பார்த்து  புன்னகை செய்தாள்  பூஜா .

பொறுமையா இருக்குறதுனால மட்டும்தான் உங்க முன்ன நான் இப்போ இருக்கேன் மிஸ்டர் சத்யா .
இல்லன்னா எப்போவோ எழுந்து போயிருப்பேன் .நீங்க என்ன சொல்ல வந்திங்களோ அதை சொல்லி முடிங்க நான் கிளம்பனும் என்று சத்தமாக பேசவில்லை என்றாலும் தான் பேசும் விதத்தில் தன்னுடைய கடுமையை காட்டின்னாள் பூஜா .

ஏங்க எப்போ பாத்தாலும் கோபமாவே இருக்கீங்க கொஞ்சம் சிரிச்சா நல்லா இருக்கும்ல என்று லேசாக புன்னகை செய்தபடி சொன்னான் சத்யா .

அவனை ஒரு ரியாக்சனும் இல்லாமல் பார்த்தாள் பூஜா .

சரிங்க உங்களுக்கு பிடிக்கலன்னா சிரிக்க வேண்டாம் .உங்களுக்கு நல்லா தெரியும் நான் உங்களை எந்த அளவுக்கு லவ் பண்ணுறேன்னு .ஆனா ஏங்க என்ன இந்த அளவுக்கு வெறுகுறிங்க .நான் ஏதாவது மாத்திக்கிட்டா உங்களுக்கு என்ன பிடிக்குமா நான்   நிச்சயம் மாத்திக்கிறேன் .நான் உங்களை நல்லா பாதுப்பேன் எங்க வீட்ல கூட உங்களை நல்லா பாத்துப்பாங்க. இந்த வேலை எல்லாம் நான் சும்மா பண்ணனும்னு பண்ணுறேன் .நீங்க என்ன கல்யாணமே பண்ணா வசதியா வாழலாம் என்று சொன்னான் சத்யா .

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]Where stories live. Discover now