🥔🌽🌶🥒🫑🍆 பாகம் 1

93 4 0
                                    

ஒரு சிறுமியின் கற்பனையில் அவள் உருவாக்கும் கதாபாத்திரங்கள் மடப்பள்ளியில் கடவுளுக்கும், பக்தர்களுக்காகவும் நாங்கள் இப்போது உணவாக விரும்பவில்லை என்று சொல்லி பத்து விதமான காய்கள் மட்டும் வேறு இடத்துக்கு இடம் பெயரப் பார்த்தால் என்னவாகும் என்பது தான் இந்தக் கதையின் கரு! வாருங்கள் இனி நம் நம்பிகளும், நங்கைகளும் பேசிக் கொள்வதை கேட்டு சிரித்து, மகிழ்ந்து பயணம் செய்வோம்!
_______________________________________

"......ம்மா! நம்ம ரெண்டு பேரையும் இன்னிக்கு ஈவ்னிங் சினிமாவுக்கு கூட்டிட்டுப் போறேன்னு ப்ராமிஸ் பண்ணிட்டு இந்த அப்பாவை பாருங்கம்மா; இன்னும் வீட்டுக்கு வரவேயில்ல! எப்போ பார்த்தாலும் லேட்; ச்சை; இப்டி ஒரு லேட் கம்மர் டேடிக்கு பொறக்காம நான் வேற ஏதாவது ஒரு நல்ல டாடிக்கு பாப்பாவா பொறந்துருக்கலாம்!" என்று தன் அன்னையிடம் சலிப்படைந்த குரலில் புகார் படித்தவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் திலகவதி.

திலகாவிற்கும், அவளது கணவன் தேவராஜிற்கும் தங்கள் மகளுக்கு இரண்டு வயது ஆகி அவளுக்கு பேச்சு வந்ததிலிருந்து இந்த பத்தாவது வயது வரை அவளது கோபமொழிகள் கூட கனிமொழிகளாய் தான் இனிக்கும்!

"குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்!"

என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க தன் மகளது பேச்சு கனிமொழி தான் என்று கணித்து பெயர் வைத்தானோ, இல்லை தகப்பன் பெயர் வைத்ததால் அந்த சிறுமியின் பேச்சுக்கள் அனைத்தும் கனிமொழிகளாய் இருந்ததோ தெரியவில்லை. மொத்தத்தில் கனிமொழியின் பேச்சு கேட்பவர் மனதை மயக்குவதாய் இருந்தது.....

"மொழி..... அப்பா ஒரு கல்யாண வீட்டுக்கு ஆர்டர் சப்ளை பண்றதா ஒத்துக்கிட்டாங்கடா; கல்யாண வீட்டுக்கு வர்றவங்க எல்லாம் நல்லா வயிறார சாப்பிடணும்ல; அதுக்கு நம்ம காய்கறி, பழம் எல்லாம் குடுக்கணும்ல? அதுனால அப்பாவுக்கு வேலையில கொஞ்சம் லேட் ஆகியிருக்கும்! சினிமா தானேடா? இன்னிக்கு பாக்கலையின்னா ரெண்டு நாள் கழிச்சு போனாப் போகுது; இதுக்காக கோவிச்சுக்கிட்டு வேற நல்ல டாடிக்கு பொறந்துருக்கலாம்னு சொல்ற! இத உன் டாடி கேட்டா எவ்வளவு ஃபீல் பண்ணுவாங்க?" என்று திலகா கனிமொழியிடம் அவள் சற்றே உறையும்படியான குரலில் கேட்க கனிமொழிக்கு தான் பேசிய வார்த்தைகளின் வீரியம் புரிந்தது.

மடப்பள்ளி நம்பிகளும் மரக்கறி நங்கைகளும்✔Where stories live. Discover now