🥔🌽🌶🥒🫑🍆 பாகம் 6

31 4 3
                                    

1. புடலையன் (நம்பி)

2. வாழை நாச்சி (நங்கை)

3. வெண்டையன் (நண்பன்)

4. கத்தரி அரசி (தோழி)

5. பச்சையன் (தம்பி)

6. வெங்கைமணி (தங்கை)

7. உருளையன் (அப்பா)

8. பீர்க்கையாள் (அம்மா)

பொருட்காட்சியை சுற்றிப் பார்த்த எட்டு பேருக்கும் அடுத்து எங்கு செல்லப் போகிறோம் என்ற கேள்வியும், எங்கு சென்று சுற்றி என்ன செய்யப்போகிறோம் என்ற சலிப்பும், சோர்வும் வந்தது. புடலையன் ஒருவன் மட்டுமே இன்னும் பல இடங்களுக்குப் போக வேண்டும், இன்னும் பல மனிதர்களின் இயல்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இருக்க மற்ற ஏழு பேரிடத்திலும் அந்த ஆர்வம் பெரிதாக காணப்படவில்லை.

மற்ற நண்பர்களைப் போல தாங்களும் மக்களின் உணவுக்காகவாவது பயன்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்க ஆரம்பித்தனர்.

அப்படியே வீதியில் சென்று கொண்டிருந்தவர்கள் ஒரு வீட்டில் மங்கள இசை, வாழைத் தோரணம் இவற்றையெல்லாம் கண்டு ஒரு நிமிடம் அங்கே நின்றனர்.

"இந்த வீட்ல ஏதோ சுப நிகழ்ச்சி நடக்குது போலிருக்கு..... நாமளும் உள்ள போய் என்ன நடக்குதுன்னு பார்க்கலாமா?" என்று பீர்க்கையாள் கேட்க அனைவரும் விருப்பம் இல்லையென்றாலும் ஏதோ ஒரு இடத்தில் இருக்க வேண்டுமென நினைத்து தலை ஆட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.

"டேய் புடலையா.... இது கல்யாண வீடு போலிருக்குடா; நம்ம தக்காளி நம்பி தாத்தா மாதிரி ஒருத்தரும், பூசணியாள் பாட்டி மாதிரி ஒரு பாட்டியும் மணவறையில ஒக்காந்திருக்காங்க! இவங்க ரெண்டு பேருக்கும் நடக்கப்போறது அறுபதாங் கல்யாணமா? இல்ல எண்பதாங் கல்யாணமான்னு தான் எனக்குத் தெரியல!" என்று தன் நண்பனிடம் தன் அபிப்ராயம் கூறினான் வெண்டையன்.

"ம்ம்ம்..... ரொம்ப முக்கியம்! எத்தனாவது கல்யாணம்னு சொன்னா நீ அவங்களுக்கு போயி பெருசா மொய் வைக்கப் போற பாரு! பேசாம நில்றா! நீ வேற!" என்று முணங்கிய படி நின்ற புடலையனிடம் ஒரு முடிவுடன் வந்த உருளையனும், பீர்க்கையாளும் தாங்கள் இருவரும் இந்த கல்யாண வீட்டின் சமையலுக்கென போகப் போகிறோம் என்று தெரிவித்தனர்.

🎉 You've finished reading மடப்பள்ளி நம்பிகளும் மரக்கறி நங்கைகளும்✔ 🎉
மடப்பள்ளி நம்பிகளும் மரக்கறி நங்கைகளும்✔Where stories live. Discover now