5

479 35 51
                                    

ஜீவாவின் தனது பயணத்துக்கு தேவையானவற்றை தயார் செய்து கொண்டிருந்தவன் ஏதோ நினைவு வர ஆனந்தியின் அறைக்குள் சென்றான்.

" ஆனந்தி"

" எண்ணன்னா. பேக்கிங்க் செய்ய ஏதும் ஹெல்ப் பண்ணனுமா"

" இல்லை. எனக்கு .. எனக்கு" என்று ஏதோ கேட்டு தடுமாற அவளுக்கு குழப்பமாக இருந்தது. " எண்ணன்னா ஏன் தயங்குற எதுவானாலும் கேளுண்ணா" என்று கூற அவன் மூச்சை இழுத்து விட்டுக்கொண்டான்.

" பசங்களுக்கு எப்போமே அம்மான்னா ரொம்ப பிடிக்கும். ஆனா எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கல. சித்திக்கு என் மேல ஆரம்பத்துல கோவம் இல்லைன்னாலும் கொஞ்சம் தூரமாத்தான் இருப்பாங்க. ஆனா நான் பண்ண ஒரு தவறால அவங்க என்ன பார்க்குற பார்வையே வேற மாதிரி ஆகிடிச்சி. பசங்களுக்கு பொதுவா அவங்க அம்மா கூட இருக்கும் போது ரொம்ப கெத்தா இருக்கும். இது எங்க அம்மாடா அப்படின்னு சொல்ற மாதிரி. ஆனா எனக்கு அந்த கொடுப்பினை இல்லாததால நான் உன்ன அந்த ஸ்தானத்துல வெச்சிதான் பார்த்திருக்கேன். நான் கேட்க போறத தயவு செய்து தப்பா புரிஞ்சிக்காத. சித்திக்கிட்டயும் சொல்லிடாத. எனக்கு உன்னோட ஒரு துப்பட்டா கிடைக்குமா. என்கிட்ட அது இருக்கும் போது நீ என்கூடவே இருக்குற மாதிரி பீல் ஆகும். அம்மாகிட்ட பேசுறதா நினைச்சி அதுக்கூட பேசிக்குவேன்" என்று கூற ஆனந்திக்கு மிகவும் கவலையாகி போனது. அண்ணன் தன்னை அம்மா ஸ்தானத்தில் வைத்தி பார்த்திருக்கின்றான் எனும் போது அவளுக்கு மிகவும் பெருமையாகவும் இருந்தது.

ஜீவா பார்ப்பதற்கு சற்று அழகாகவே இருப்பான். ஆனந்தியின் தோழிகள் வீட்டுக்கு வந்தாலோ அல்லது அவனை எங்கும் வெளியில் கண்டாலோ சைட் அடிக்காமல் விட்டதில்லை. இதை ஆனந்தியிடமே அவர்கள் வெளிப்படையாக கூவார்கள். ஒரு சில தோழிகள் வெளிப்படையாகவே அவளை நாத்தனார் என்று கூப்பிடுவதும் உண்டு. அதிலும் குறிப்பாக சுபா ஒரு படி மேலே சென்று சில நாட்களாக இந்த விடயத்தில் சீரியசாகவே இருந்தால். இப்போது எப்படி என்று தெரியவில்லை.

மை விழி திறந்த கண்ணம்மாWhere stories live. Discover now