32

317 32 54
                                    

குமார், சாரதாவின் தம்பி. பெரிதாக எதுவும் படிக்காதவன் ஆனால் புத்திசாலி. அவனுக்கு ஜனனியின் மேல் என்றுமே ஒரு ஆசை, காதல் உண்டு. அவனுக்கும் அவளுக்கும் பதின் மூன்று வருட வித்தியாசம் இருந்தாலும் அவை எல்லாம் கிராமத்தில் சகஜம். ஜனனியை திருமணம் முடிக்க அவன் எவ்வளவோ முயன்றாலும் சாரதா ஏதாவது காரணம் காட்டி அதை தள்ளிப் போட்டு விடுவாள். இருந்தாலும் சாரதாவால் தன்னை மீறி எதுவும் செய்துவிட முடியாது என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்ததால், சாரதா கூறிய காரணங்களை ஏற்றுக் கொண்டு பொறுமை காத்தான். ஆனால் இம்முறை ஜனனியே அவனுக்கு கால் செய்து பேசியதால் சாரதா இதில் தலையிட எதுவுமில்லை என்று அவனுக்கு தெரிந்தது. தன் வருங்காள மனைவியையும் அவனின் மாமியாரையும் ஊருக்கு அழைத்து செல்ல அவன் உடனே வந்துவிட்டான்.

சாரதா ஜனனியிடம் கொஞ்சமாவது எதிர்த்து பேசுவாள். ஆனால் அவளின் தாய், தம்பி முன் அவள் பேசா மடந்தையாகி விடுவாள். நெருப்பை காட்டி அதில் விரலை விட சொன்னால் கூட 'ஆட்காட்டி விரலையா அல்லது சுட்டு விரலையா விட வேண்டும்' என்று கேட்கும் அளவுக்கு அவளின் பயம் இருக்கும். சிறு வயதில் இருந்து வரும் பயத்தை எளிதில் யாராலும் மாற்றிவிட முடியாது. இந்த பயம் எதுவும் ஜனனிக்கு வந்துவிடாமல், அவளை சுயமாக சிந்திக்க சாரதா அளித்த இடம்தான் இன்று வினையாகி வந்திருக்கின்றது. இதை நினைக்கும் போது ஜனனியை தன் கட்டுக்குள் வைத்தே வளர்த்திருக்க வேண்டுமோ என்ற எண்ணம் அவளுக்கு எழுந்தது.

செந்தாளம் குளம்..( கற்பனை பெயர்)ஒரு கிராமம். கெளரவக் கொலைகளுக்கு பெயர் போன இடம். குமார்தான் அந்த ஊரின் பெரிய தலைக்கட்டு. அவனை கேட்காமல் அங்கு அணுவும் அசையாது. ஆனால் அந்த பெரிய தலைக்கட்டுக்கே ஒரு பெரிய ஆப்பு வைக்க போவது அவனின் ஆசை காதலி என்பது அவனுக்கு தெரியவில்லை.

இரவு ஊர் வந்து சேர்ந்ததும் சாரதாவுக்கு உறக்கமே வரவில்லை. நாளை கழித்து மறு நாள் திருமணம். செந்தாளம் குளம் வந்தாலே சாரதா மந்திரத்துக்கு கட்டுண்டவள் போலாகிவிடுவாள். அவளின் பயம் அவளை பேச விடாது. இந்த முறை அவளின் இயாலாமையை எண்ணி அவள் மிகவும் வேதனைப் பட்டாள்.

மை விழி திறந்த கண்ணம்மாOù les histoires vivent. Découvrez maintenant