Part - 2 ! முதல் சந்திப்பும் , முதல் sight-um 😉

226 7 0
                                    

Admission எல்லாம் நல்லபடியாக முடித்து வீடு திருபினார்கள் கார்த்திக் மற்றும் அவனது பெற்றோர்கள் ...

மாலை 6:30 மணி ,
கார் வேகமாக NH இல் பாய்ந்து கொண்டிருந்தது ! ரகுநாதன் தனது துணி கடை விஷயமாக தனது கடை supervisor இடம் phone -இல் ஏதோ பேசிக்கொண்டிருந்தார் ! கார்த்திக்கும் அவனது தாய் கோமதியும் அசதியில் உறங்கிக்கொண்டு வந்தனர் ...

திடீரென உறக்கத்தில் இருந்த கார்த்திக் விழித்துக்கொள்ள, அவனது அப்பா phone பேசியவாரே அவனை பார்த்து குறுநகை செய்தார் !

கார்த்திக் சுற்றி பார்த்தபோது அப்போது கார் திருக்கோவிலூரை கடந்து சென்று கொண்டிருந்தது ...
கார்த்திக் காரின் கண்ணாடியில் தலையை சாய்த்தவாறு வேடிக்கை பார்த்து வந்தான் ...

அவனையும் அறியாமல் அவன் மனம் அங்கு நடந்ததை எண்ண! அவன் மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி பிறந்தது ... ❤️

அவனது நினைப்பிலேயே நேரம் கடந்ததே தெரியாமல் ஆனந்த களிப்பில் இருந்தான் கார்த்திக் !

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


அவனது நினைப்பிலேயே நேரம் கடந்ததே தெரியாமல் ஆனந்த களிப்பில் இருந்தான் கார்த்திக் !

வீடு வந்ததும் மூவரும் இறங்கி வீட்டிற்குள் செல்ல , மூவரையும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த வைஷ்ணவி வாங்க , எல்லாம் நல்லபடியா முடிந்ததா ? என்று வினவினாள் ! 😇

       எல்லாம் முடிந்தது செல்லம் ... கார்த்திக்கு எல்லாம் Ok ஆயிடுச்சி ! College open பண்ண இன்னும் ஒரு 2 - 3 weeks ஆகும் ! அதுக்குள்ள இவனுக்கு தேவையான things எல்லாம் purchase பண்ணிடலாம் என்று கூறி அருகில் இருந்த Sofa- வில் அமர்ந்தார் ரகுநாதன் !

       களைப்புடன் இருந்த அம்மா தனது room உள்ளே சென்று சீலையை மாற்றிவிட்டு சாப்பிட உணவு தயார் செய்ய kitchen இல் நுழைந்தாள் ... ஆனால் அதற்கு மாறாக முன்பே வைஷ்ணவி தோசையும் chutney யும் தயார் செய்து வைத்திருந்தாள் !

காதலும் மோதலும் ❤️💫Where stories live. Discover now