3•

66 6 4
                                    

          வாகனத்தை கராஜுக்குள் விடும் வரையிலும்கூட ஆசியாவுக்குப் பொறுமையில்லை. கதவைத் திறந்துகொண்டு இறங்க முயன்றவளைத் தடுத்தான் அர்ஷாத்.

"ஹேய் பொறும பொறும. வீட்டுக்குள்ள தான போகப் போறோம்."

பொறுமையின்றிப் புன்னகைத்தாள் அதற்கும்.

ஸலாம் கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தவர்களைப் பதிலுடன் வரவேற்றனர் ஒரு கபடம் காணாப் புத்துயிரின் வரவால் புது உற்சாகம் கொண்டிருந்த ஆசியாவின் தாய் வீட்டினர்.

முன் மண்டபத்தில் அமர்ந்திருந்த தன் மாமனாருடனும் ஷிரீனின் கணவனுடனும் மற்றும் ஆசியாவின் தம்பி மாஹியுடனும் அர்ஷாத் சென்று ஐக்கியமாகிக்கொள்ள, ஆசியாவோ நேராகத் தன் தங்கையின் அறையை நோக்கிச் சென்றாள்.

தன் கைகளில் அழகாய் அசைந்து கொண்டிருந்த குழந்தையைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ஷிரீன், ஆசியாவைக் கண்டதும் முகம் மலர்ந்தாள்.

கனதியான துணியால் சுற்றப்பட்டிருந்த அந்தப் பூக்குவியலை அள்ளியெடுத்தாள் ஆசியா. அவள் எதிர்பார்ப்புடன் சேமித்து வைத்திருந்த அத்தனை அன்பையும் முத்தங்களாக்கிக் குழந்தையின் மீது பொழிந்து கொண்டிருந்தவளை ஆசையுடன் ஏறிட்டுக் கொண்டிருந்தாள் ஷிரீன்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அவள் குழந்தைக்காக அவளை விடவும் ஆவலாக ஆசியாதான் காத்திருந்தாள். ஆசியா பரிந்துரைத்த 'அனம்' என்ற பெயரையே தன் குழந்தைக்கு வைத்திருந்தாள் அவள் தங்கை.

அனம், அவர்கள் வாழ்வில் ஓர் அருட்கொடையே!

சாத்தியமாகியிருந்தால் தனக்குக் கிடைத்திருக்கும் இந்தத் தாய்மைப் பாக்கியத்தை ஆசியாவுக்கே வாரிக் கொடுத்திருப்பாள் ஷிரீன். தன் சகோதரியின் ஆசைகளைப் பற்றி அவள் அறியாததா?

அவளுக்கு நன்றாகவே ஞாபகமிருந்தது. ஆசியா உயர்தரத்தில் கற்றுக் கொண்டிருக்கும் வேளைகளில் அடிக்கடி,

"dதாத்தா.. நீ பேசாம டக்குன்டு கலியாணம் முடிச்சிட்டு போயேன். என் ப்ரென்ட்ஸ் எல்லாருக்கும் dதாத்தா, நாநாட புள்ளையிருக்கு. எனக்கு மட்டும் தான் இல்ல" என்பாள் ஷிரீன், விளையாட்டாக.

"போயேன் கொஞ்சம். நான் படிக்கனும் முதல்ல. கல்யாணம் எல்லாம் பிறகுதான்" என்பாள் ஆசியாவும். இவர்களின் சம்பாஷனையைக் கேட்டுச் சிரிப்பார் அவர்களது தாயார்.

அதையெல்லாம் நினைத்தவாறு உணர்ச்சியின்றிய ஒரு பெருமூச்சை விட்டபடி ஆசியாவையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஷிரீன்.

வேலையிலிருந்து வந்த களைப்பே தன்னை அண்டியிராதது போல அபாயாவைக் களைந்து வைக்கும் சிந்தனையேயிராது குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தவள் தன் தாயார் கொண்டுவந்த குடிபானத்துக்குத்தான் தலையை உயர்த்தினாள்.

குழந்தையைக் கட்டிலில் வளர்த்தியவளைக் களைப்பென்ற உணர்வு அப்போதுதான் கொஞ்சமாவது வந்து தழுவ, பானத்தை அருந்திவிட்டுத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வந்தாள்.

ஆசியா குழந்தைக்காகத் தான் வாங்கி வைத்திருந்த பொருட்களையெல்லாம் ஆசை ஆசையாகக் கொண்டு வந்து தங்கையிடம் காட்ட, அவளோ வாயைப் பிளந்தாள்.

"என்ன இதெல்லாம்? ஏன்ட புள்ளைக்கு நானே இன்னும் இவளோ சாமான் வாங்கல்ல dதாத்தா.." என்றாள் ஷிரீன், விழி விரித்துக்கொண்டே..

"அதுதான் ஏன்ட புள்ளைக்கு நானே எல்லாத்தயும் வாங்கிட்டேன்.." என்றாள் ஆசியா கண்களை சிமிட்டியவாறே..

ஓர் அசாதாரண மலர்ச்சியுடன் தன்னிடமும் குழந்தையைத் தூக்கி வந்து காட்டி அழகு பார்த்துக் கொண்டிருந்த ஆசியாவை ஏறிட்ட அர்ஷாதுக்கும் அவளது மலர்ச்சி தொற்றிக்கொண்டது.

அசதியுடன் இருந்த தன் தங்கைக்கு உதவுவதும் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவதும் சமையலறையில் தன் தாய்க்கு உதவுவதும் என்று அன்றைய தினம் நன்றாக பிஸியாகிவிட்டாள் ஆசியா.

நினைத்தது எல்லாம்..✔Where stories live. Discover now