6•

53 6 0
                                    

          மாதங்களிரண்டு கடந்திருக்கும்.

அந்தப் பாலர் பாடசாலையின் அன்றைய நாள் நிறைவடைந்ததை அறிவிக்கும் விதமாக அங்கு பயிலும் சின்ன மொட்டுக்களின் கோரஸ் ஒலியில் ஸலவாத் ஒலிக்க,

குட்டிப் புத்தகப்பைகள் மற்றும் கழுத்தில் தொங்கும் தண்ணீர்ப் போத்தல்கள் சகிதம் அழகாக அணிவகுத்துச் செல்லும் குழந்தைகளை முறையாகக் கவனித்து அனுப்பிவிட்டு சக ஆசிரியைகளிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியேறினாள் ஆசியா.

அர்ஷாத் வேலையிடத்தில் இருப்பானாகையால் பெரும்பாலான நேரங்களைப் போலவே நடந்துதான் வீடுவரை சென்றாக வேண்டும். அந்த நினைப்புடன் வீதியில் கால் வைத்தவளைத் தன் பக்கம் பார்க்க வைத்தது ஒரு ஹார்ன் சத்தம்.

மாஹி?

அவளது தம்பிதான் வேனை எடுத்துக்கொண்டு வந்திருந்தான். குழப்பத் திரையை முகத்திற் பரப்பியவாறே இவளும் அப் பக்கமாகப் போக, சாரதி இருக்கையின் பக்கத்தில் அமர்ந்திருந்த அர்ஷாத் இவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

"அஸ்ஸலாமு அலைக்கும்!"

"வ அலைக்கும்ஸலாம். வட் அ சர்ப்ரைஸ்.." என்றவாறே வேன் கதவைத் திறந்துப் பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள்.

"உம்மாட வீட்டுக்கா போறோம்?"

"ம்ஹும். எங்கட வீட்டுக்குத்தான் ஆசியா" கண்ணாடியூடே அவளைப் பார்த்தவனாக அர்ஷாத் சொல்ல, அவள் வேறெதுவும் கேட்கவில்லை.

கண்ணாடியைக் கொஞ்சம் கீழிறக்கிவிட்டுக் கொண்டவளை வந்து தழுவிய காற்று, பாலர்களுடன் மல்லுக்கட்டிவிட்டு வந்திருப்பவளின் களைப்பை நீக்கும் பிரயத்தனத்தில் இருந்தது.

நேரம் மௌனமாகக் கடந்து கொண்டிருக்க, இடைக்கிடை மாஹியின் அருகில் நகர்ந்து தனக்குச் சரியாகக் கேட்காத அரவத்தில் தன் கணவன் ஏதோ பேசிக் கொள்வதை ஆசியா கவனிக்காமலில்லை.

"என்ன மச்சானுக்கும் மச்சானுக்கும் கொஞ்சல்?"

இரண்டு முறை சும்மா இருந்தவள் இம்முறை கேட்டுவிட்டாள்.

"ஏன்ட மச்சானுக்கும் எனக்கும் ஆயிரம் கொஞ்சல் இருக்கும். உனக்குப் பொறாமயா dதாத்தா?"

இவ்வாறு மாஹி கேட்டதையடுத்து சிரித்த அர்ஷாதைக் கண்ணாடியில் பார்த்து உதட்டை சுளித்துக் கொண்டவள் மீதிப் பயணத்தில் ஜன்னலுக்கு வெளியே பார்வையை செலுத்திக்கொண்டு வந்தாள்.

ஆசியா மற்றும் அர்ஷாதின் வீட்டு வளவுக்குள் அந்த வேன் வந்து சேர, அந்த சத்தம் கேட்டு வந்து கதவைத் திறந்தார் ஆசியாவின் தாய்.

"உம்மா! நீங்க எப்ப வந்திங்க?"

வேனைவிட்டு இறங்கியவளது முகம் மலர்ந்தது.

வீட்டுக்குள் நுழைந்தவள் அங்கே தன் குழந்தை சகிதம் ஷிரீனும் வந்திருப்பதைக் காண, ஆசியாவைத்தான் கையிலேயே பிடிக்க முடியவில்லை.

நடு மண்டபத்து சோபாவில் அமர்ந்தவாறு மடியில் ஷிரீனின் குழந்தையை வைத்துக் கொண்டவள் தன் தாயுடனும் சகோதரியுடனும் கதைக்க ஆரம்பிக்க,

"போய் அபாயாவ சேன்ஞ் பண்ணி ஃப்ரெஷ் ஆகிட்டு வாயேன் dதாத்தா. டயர்டா இருக்கும்" என்றாள் ஷிரீன் குழந்தையை அவளிடமிருந்து வாங்கியவாறே..

சரியென்றவள் தன்னறைக்குச் சென்று மூடியிருந்த கதவைத் திறந்தாள். கதவைத் திறந்த மாத்திரத்தில் ஏதோவொன்று தன் அபாயாவின் மீது தொற்றிக்கொள்வது போலுணர்ந்து திடுக்கிட்டவாறே பின்னால் நகர்ந்தாள்.

அவளது அபாயாவில் மாட்டிக்கொண்ட தன் கூறிய நகங்களை இழுத்தவாறே,

"மியாவ்" என்றது அது.

"லாலா!" என்றாள் இன்ப அதிர்ச்சியுடன்.

குனிந்தவள் அதைத் தூக்கிக் கைகளில் எடுக்க, அவளது அபாயாவின் கையைப் பாய்ந்து கௌவிக்கொண்டு விடமாட்டேன் என்றது லாலா.

ஆர்வத்துடன் இதை எதிர்பார்த்து ஆசியாவின் குடும்பமும் அவள் பின்னாலேயே வந்திருந்தது.

"புள்ளைக்கு உம்மாவ கண்டதும் 'ஜோஸா'கிட்டு போல.."

மண்டபத்திலிருந்து எட்டி அவளைப் பார்த்தவாறு இவ்வாறு கூறிய அர்ஷாதைக் கேள்வி கலந்த பார்வையுடன் இவள் நோக்க, அவனோ புன்னகையுடன் கண்ணடித்தான்.

நினைத்தது எல்லாம்..✔Where stories live. Discover now