7•

73 6 2
                                    

          லங்கார விளக்குகள் இடைக்கிடை ஒளிர்ந்து கொண்டிருக்க, விருந்தினர்களின் விஜயத்தால் விழாக்கோலம் பூண்டிருந்தது அவ்வீடு. அது அர்ஷாதின் சாச்சி வீடு. அவரது மகளின் திருமணம் நெருங்கிவிட்டதாலே அங்கந்த வைபோகம்.

தன் தாய்வீட்டிலிருந்து வந்த பின்னர் பாலர் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர வீட்டிற்குள்ளேயே அடைந்திருந்த ஆசியாவை மேலும் தனிமையில் விடுவது நன்றாகப் படவில்லையாதலால் தவறாது அழைத்தே போயிருந்தான் அர்ஷாத்.

மைத்துனியருடன் சாப்பிட அமர்ந்த ஆசியா அது முடிய, தாம் சாப்பிட்ட 'சஹனை'த் தூக்கிக்கொண்டு சமையலறையின் கொல்லைப்புறத்துக்குச் சென்றாள், மீதமாகியிருந்த எலும்புத் துண்டுகளை அகற்றுவதற்காக.

குப்பைத்தொட்டியினருகே குனிந்தவள், தன் அருகே ஒரு குட்டிக் கீச்சொலியைக் கேட்டுத் திரும்பினாள்.

இரண்டே குட்டிப் பற்களுடன் தன் குட்டி வாயை அகலத் திறந்துகொண்டு மின்னும் கண்களுடன் கத்திக் கொண்டிருந்தது ஒரு பூனைக் குட்டி. வெள்ளையுடம்பில் அங்குமிங்குமாய் கருப்பும் கபிலமும். அழகான குட்டி.

அதன் தாய் அங்கெங்கேனும் அருகில் இருக்கின்றதா எனப் பார்வையிட்டவள் பதிலேதும் கிடைக்காது போகவே திரும்பி அந்தக் குட்டியைப் பார்த்தாள். அதுவோ தன் இளஞ்சிவப்பு நிற வாயைத் திறந்தபடி அருகில் வந்து நீண்டிருந்த ஆசியாவின் ஆடையைத் தன் வாயால் கௌவிக் கொண்டது.

பசியாயிருக்கும் என எண்ணிப் பாவம் கொண்ட ஆசியா ஒரு கோழி எலும்பிலிருந்து சதையைப் பிய்த்து அதன் வாயினருகே கொண்டு சென்றாள். அது ஆசியாவின் ஆடையை விட்டுவிட்டு அதை இடைக்கிடை கடித்தவாறு நக்கத் தொடங்கியது. மிகவும் பசிபோலும்.

"எங்கட வீட்டுக்கிட்ட சுத்திட்டிருக்குற பூனைட குட்டிதான் அது. தாய் செத்துப் போயிட்டுது. பாவம். குட்டினால துரத்தவும் ஏலாம வச்சிட்டு இருக்குற.. ஒரே வந்து வந்து கத்துறதும் நீட்டு உடுப்பு போட்டிருந்தா வந்து இழுக்குறதும் அங்கயும் இங்கயும் 'நஜீஸ்' பண்ணி வெக்கிறதும்தான் வேல. கொஞ்சம் வளந்ததும் துரத்திடனும்"

அந்தப் பக்கம் வந்த அர்ஷாதின் சாச்சிதான் ஆசியாவிடம் இப்படிச் சொன்னார். ஆசியாவுக்கோ இதயமே உருகிப் போய்விட்டது. அந்தப் பூனைக்குட்டியை அங்கு விட்டுச்செல்ல அவளுக்கு மனமேயில்லை. அதைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.

மனதே கேட்காமல் சமையலறைக்குள் நுழைந்தவள் சாச்சியின் அனுமதியுடன் கொஞ்சமாகப் பாலைக் கரைத்து எடுத்துக்கொண்டு சென்றாள். அதை அருகிலிருந்த மூடியொன்றில் அவள் ஊற்றி வைக்க, குடுகுடுவென்று ஓடிச் சென்று பொறுமையில்லாமல் தன் குட்டி நாக்கால் நக்கத் தொடங்கியது.

அந்தப் பூனைக் குட்டியைப் பார்க்கச் சிறு குழந்தை செயல்போலவே இருக்க, கால்களை மடித்துக் குனிந்தவள் அதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு சிறிது நேரத்தில் எழுந்து உள்ளே செல்லத் திரும்பினாள்.

"மியாவ்!"

இப்பொழுது கொஞ்சம் தெம்பாகவே கத்திய பூனைக்குட்டி மீண்டும் அவளது ஆடையை வந்து கௌவிக் கொண்டது. அவள் அதனை எடுத்துவிட, மீண்டும் மீண்டும் அவளிடமே தொற்றிக்கொண்டு அவள் பின்னால் சென்றது.

'தூக்கிப் பார்ககலாமா?'

அதுவரை அவள் ஒரு பூனைக்குட்டியைத் தூக்கியதில்லை. ஜொலிக்கும் அதன் கண்களைப் பார்த்தவள் மீண்டும் யோசிக்காமல் அதனைத் தூக்கித் தன் முழங்கையோடு சேர்த்து வைத்துக்கொண்டாள். அவளது ஆடையைத் தன் நகம்கொண்டு அது இழுப்பதெல்லாம் அவள் கருத்தில் பதியவில்லை. மெதுவாக அவள் அதை ஆட்டிப்பார்க்க, அதுவோ கொட்டாவி விட்டவாறு தூங்கத் தொடங்கியது.

பாவம்.

தாயின் வாசம் தேடிக் கிடைக்காது தவித்துக் கொண்டிருக்கின்றது போலும்.

நினைத்தது எல்லாம்..✔Where stories live. Discover now