முன்னுரை

1.1K 107 74
                                    

பாலை சங்க தமிழ் திணைகளில் ஒன்று, பாலை என்றதும் அதனை தார் பாலைவனம் என்றே நம் மனக்கண் பார்க்கிறது, ஆனால் தொல்காப்பியத்தின் கூற்றுப் படி பழந்தமிழகத்தில் பாலை வனமே இருந்திருக்கவில்லை, மாறாக முல்லையும் குறிஞ்சியும் கடும் வறட்சியில் திரிந்து தன் பொலிவிழந்து கொடிய பாலையாக மாறுகிறது, சுருங்க சொல்ல வேண்டுமெனில், இரயில் பயணங்களில் நம்மை கடந்து செல்லும் பொட்டல் காடுகளை போன்றது தான் பாலை. சூரியன் சுட்டெரிக்கும் நண்பகல் தான் இங்கு உரிய காலம். பார்ப்போர் நடுங்கும் கொற்றவை தான் காவல் தெய்வம், புலிகளை விரட்டும் பறை தான் இனிய கானம் . புல்லை உண்ண முடியாமல் வஞ்சிக்கப்பட்ட ஊனுண்ணிகளை போலவே இந்நிலத்து மக்கள், இயற்கையாய் எதையும் விளைவிக்க முடியாத இம்மண்ணில் வழிப்பறியே இவர்கள் தொழில். கொடுக்கப்படாதது எடுக்கப் படுவதில் தவறில்லையே.! பறியே ஆயினும் அதிலும் நெறி உண்டு. இயற்கையின் நெறி எல்லாவற்றிக்கும் உண்டு. எலியை தின்று வாழ வேண்டும் என்பது பூனைக்கு இயற்கையின் நெறி. எலியின் மீது கருணை கொண்டு பூனைகளை கொன்றால், வீடெங்கும் எலியே நிறைந்திடும். இயற்கையின் நெறியை உடைக்க முயல்பவரை , இயற்கையே முடக்கி விடும். இக்கதையிலும் ஒரு இளவரசன் இயற்கையின் நெறியுடன் மோதுகிறான், நிகழ்வதை காணலாம் .

கொற்றவைWhere stories live. Discover now