கொற்றவை

565 87 187
                                    

                             அந்த கொடிய உறுமல் ஓசை கேட்டதும் , படையினுள் ஒரு கலக்கம் ஏற்பட்டு, வீரர்களின் விரல்கள் ஆயுதங்களில் இறுகின. எந்த புறமிருந்து தாக்குவார்கள் என்று தெரியாமல் இருபுறமும் நோக்கியவாறு அவர்கள் இருந்தனர். சிலர் தங்களுள் ஏற்பட்ட பயத்தை மறைக்குமாறு வெற்று துணிச்சலில் கோசங்களும் ஆரவாரங்களும் எழுப்பினர், தங்கள் கேடயங்களை விட்டெறிந்து சாவுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டனர். அடுத்த சில நொடிகளில் அரவமற்ற சிறு அமைதி. வீரர்கள் இதுவும் கள்வர்களின் விளையாட்டாக இருக்குமோ.. என எண்ணிய வேளை திடீரென பெரும் உறுமலுடன் புதரிலிருந்து புலிகள் பாய்ந்தன.. வீரர்களாய் இருப்பினும் புலியை கண்டிராத மருத வாசிகள் சற்று நிலை தடுமாறி தான் போனார்கள். சாவுக்கு தன்னை தயார் படுத்திக் கொண்ட வீரர்கள் கூட , இப்படி ஒரு சாவு நிகழுமென்று எண்ணியிருக்க வில்லை. அரசனின் ஆணைப்படி அம்புகள் பாய்ந்தும் பயனில்லை. பெரும் பறையால் விரட்டப்பட்ட புலிகள் அம்புகளையும் மிஞ்சி வீரர்களை வேட்டையாடின. பலர் துணிந்து போரிட்டாலும் சிலர் பயந்து பின் வாங்கியதால் , ஏற்பட்ட சச்சரவில், பலர் கால் இடறி பள்ளத்தாக்கில் விழுந்தனர். சீராக இருந்த இளவரசனின் படை இப்போது உருக்குலைந்து போனது, அடுத்த நொடி கள்வர்கள் பள்ளத்தாக்கின் இருமருங்கிலும் வெளிப்பட்டு சிதைந்திருந்த படையை மேலும் சிதைத்தனர். இளவரசன் தன்னை நோக்கி பாய்ந்த கடைசி புலியை தன் வாளால் கீறி புலிகளின் கதையை அத்தோடு முடித்தான், இனி கள்வர்கள் மட்டுமே. எண்ணிகையில் குறைவே ஆயினும் கள்வர்கள் போர்த் திறனில் சளைக்காமல் வீரர்களுக்கு ஈடு கொடுத்தனர். புழுதி மூட்டங்கள் தரையில் கார் மேகங்களாய் மூடியது, ரதத்திலிருந்த வீரர்களுக்கு யாரை குறி வைப்பது என்று தெரியாமல் தவித்தனர், பின் தம் மக்கள் சாவதை கண்டு வில்லாலர்கலான அவர்களும் வாள் கொண்டு களத்தில் குதித்தனர்.

கட்டியங்கன் தன்னை எதிர்த்த இருவரை வேலுக்கு இரையாக்கி முன் நோக்கி சென்றான், மற்றுமொருவன் அவன் மரர்பை குறி வைத்து வாள் வீச, அதை தன் வேலால் தடுத்தவன் , அவன் சுதரரிப்பதற்குள் வேலின் கூர்முனை கொண்டு அவன் நெஞ்சை தாக்கினான், கட்டியங்கன் வேல் கவசத்தில் கிழித்து கிளாங் என ஓசை எழுப்பியதே தவிர, அந்த வீரனின் உடலில் எந்த காயமும் ஏற்படுத்த முடியவில்லை. மருத வீரர்களின் கவசங்கள் அவர்களுக்கு பெரிய பலமாக இருந்தன, இதனால் தான் கட்டியங்கன் அவர்களை போரில் சந்திக்க தயங்கினான். கள்வர்களின் வேல் அவர்கள் கவசத்தை கிழித்து மார்பை நெருங்கும் முன்பே பல வாள்கள் கள்வர்களின் மார்புகூட்டை உடைத்திருக்கும். அந்த வீரன் அடுத்த அடிக்கு ஒங்க, அதற்குள் மற்றொரு மருத வீரன் அவன் மேல் இடறி விழுந்து விட்டான். இருவரும் சேர்ந்து பள்ளத்தாக்கில் உருள, கட்டியங்கன் எளிதாக இருவர் கதையையும் முடித்தான்.

கொற்றவைOù les histoires vivent. Découvrez maintenant