வேட்கை

317 70 92
                                    


இளவரசன் வேறேதும் பேசாமல் மெளனமாக அமர்ந்திருக்க. சிதைந்து போன படைகள் சிறிது சிறிதாக வந்து சேர்ந்த படியே இருந்தனர். அனைவரும் சேர்ந்த போது, இளவரசன் படைகளில் பாதியை இழந்திருந்ததை அறிந்தான். மீதி வீரர்களும் மனதால் மிகவும் சோர்வுற்றிருந்தனர். இது அவர்களுக்கு முதல் பெரிய இழப்பு , என்பதால் சிறிது பயமும் அவர்கள் முகத்தில் ஒளிந்திருந்தது. படை வீரர்களிடம் நீரோடை போல ஒரு சலசலப்பு ஓயாது, ஒலித்தவாறே இருந்தது. இளவரசன் தன் மௌனம் கலைத்து எழுந்ததும் அடுத்த நொடியில் படை நிசப்தமானது.

தன் படையை முழுதுமாக ஒரு தீர்க்க பார்வையால் ஆராய்ந்தான் இந்திராதித்தன், பின் பேசத் தொடங்கினான்.

" வீரர்களே.. அந்த கள்வனை கண்டு நான் வியக்கிறேன், கள்வனாக இருப்பினும் சொன்ன சொல்லை காப்பாற்றி விட்டான். நம்மை சூறையாடி விட்டான். " நிமிந்த வீரர்களின் தலை ஆங்காங்கே வெட்கி குனிய தொடங்கியது இதை கேட்டதும்.

" நம் உணவு பொருட்களையும் நீரையும் கூட பறித்து விட்டனர். உணவு இல்லையெனில் நாம் பின்னங்கால் பிடரியில் பட ஓடி விடுவோமென அவன் எண்ணி விட்டான் போலும், அவனை சொல்லி தப்பில்லை. போஜனைக்கு வழியின்றி தானே திருடுகிறான். அவனுக்கு உணவு தான் உலகம், அவனை போலவே நாமும் என எண்ணி விட்டான். ஆனால் நாம் அப்படியா.. என் படை முழுவதும் நான் தேடி எடுத்த வீரர்கள் ஆயிற்றே.. அவர்கள் உணவுக்கும் உடுக்கைக்கும் ஆசைப் படும் சுகவாசிகளா..? "

இல்லை என்று ஒரு கர்ஜனை ஆங்காங்கே ஒலித்தது.

" அப்படியே நாம் திரும்பி சென்றாலும், புறமுதுகிட்டு ஓடியவனை மனைவி மஞ்சத்தில் ஏற்பாளா.. கண்ணாடியும் நம் முகம் காட்ட வெட்கி தான் போகுமே.. போரிட்டு மாண்டாலும் கோடி வருடம் மக்கள் மனதில் வாழ்வோம், உயிருக்கு பயந்து பின் வங்கியே அன்றே மண்ணோடு மடிந்து போவோமே. இந்த தர்மம் தெரியாதா நமக்கு.. நான் ஒன்று சொல்கிறேன். அந்த கள்வனின் கணக்கு பிழை. நமக்கு நீர் உண்டு, உணவு உண்டு.. எங்கு தெரியுமா.. அந்த கள்வர்களில் இருப்பிடத்தில். இறந்து போன கள்வன் அங்கு செல்லும் வழியை சொல்லி விட்டே மடிந்தான். நம் தாகமும் பசியும் கால்களின் வேகமாக மாறட்டும். கடந்த பாதைகளில் நாம் படும் இன்னல்கள் யாவும் அந்த கள்வர்களின் மரணத்தை இன்னும் இன்னும் கொடியதாக்கும். நாம் அவரிடத்தை அடைகையில் ,

கொற்றவைUnde poveștirile trăiesc. Descoperă acum