🕵1🕵

5K 133 168
                                    

அந்த வெள்ளை நிற சான்ட்ரோ கார் ஊருக்கு ஒதுக்குபுறமாய் இருந்த பங்களாவிற்குள் நுழைய அதை பின் தொடர்ந்து வந்த ஜெய்சங்கர் அருகே இருந்த பெரிய மரத்தின் பின்னே மறைவாக தன் பைக்கை நிறுத்தி விட்டு அங்கே நடமாடுகின்ற ஆட்களை நோட்டமிட ஆரம்பித்தான்.

காரிலிருந்து இறங்கிய அந்த பிரபலமான தொழிலதிபர் வீட்டினுள் செல்ல அவருடன் இரண்டு நபர்கள் மட்டும் உள்ளே சென்றனர். வெளியே நல்ல திடகாத்திரமாக இருந்த இருவர் காவலுக்கு நின்றனர்.

வண்டியை தள்ளி கொண்டு ஓசையின்றி வீட்டிற்கு பின்னால் சென்றான் ஜெய். காம்பவுன்டை ஒட்டி வண்டியை நிறுத்தியவன் மெதுவாக அதன் மேல் ஏறி பார்க்க பின்புறம் ஒருவரும் இல்லை. அதில் குஷியானவன் மெல்ல ஒரு எம்பு எம்பி சத்தம் எழாமல் உள்ளே குதித்தான்.

தன் பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்தவன் வீடியோ கேமராவை ஆன் செய்து கொண்டு பூனை போல் பதுங்கி பதுங்கி சுற்றும்முற்றும் பார்த்தவாறே வீட்டை நோக்கி முன்னேறினான். அருகில் சென்றதும் பேச்சுக்குரல் கேட்கின்ற ஜன்னலருகே சென்று நின்றவன் மெல்ல மொபைலை அட்ஜெஸ்ட் செய்து உள்ளே நடப்பதை கவனித்தான்.

பெரிய டேபிள் முழுவதும் பண்டில் பண்டிலாக இரண்டாயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டு கட்டுக்கள் அடுக்கப்பட்டிருக்க எதிரே நின்றிருந்த அந்த பணக்காரர் அதில் சில நோட்டுக்களை எடுத்து கண்கள் மூடி வாசம் பிடித்தவாறு அட்டகாசமாய் சிரித்து கொண்டிருந்தார்.

அதைக் கண்டு அதிர்ந்தவன், 'அடப்பாவி... இப்படியெல்லாம் தொழில் செய்து தான் நீ பெரிய தொழிலதிபர் ஆனாயா? இந்த கள்ள நோட்டையெல்லாம் மார்க்கெட்டில் மாற்றி ஒன்றும் தெரியாத அப்பாவிகளை போலிஸில் மாட்டி விட்டு நீங்கள் தப்பி விடுகிறீர்களே... உங்களை விட மாட்டேன்!' என்று மொபலில் ரெக்கார்ட் பண்ண ஆரம்பித்தான்.

அந்த தொழிலதிபரின் முகம் நன்றாக தெளிவாக தெரிய, "ம்... என்று டெஸ்பாட்ச் செய்கிறீர்கள்?" என அவர்களிடம் விவரம் கேட்டார்.

என்னை தெரியுமாWhere stories live. Discover now