🕵18🕵

874 84 57
                                    

"தள்ளி விடாமல்... பின்னே கட்டி..." என்று பொரிய ஆரம்பித்த மணி, தன் வார்த்தைகளின் பொருள் உணர்ந்து சட்டென்று நாக்கை கடித்துக் கொண்டாள்.

அதைக் கண்டு மீண்டும் துள்ளலுடன் அவளிடம் நெருங்கிய ஜெய் நூலளவு இடைவெளியில் நின்று, "ம்... கட்டி...?" என்று எடுத்துக் கொடுத்தான்.

அவனை தீப்பார்வை பார்த்தவள், "இந்த வேலையெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள்!" என்று எகிறினாள்.

"வேறு யாரிடம்டி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறாய்?" என்று அவள் கை விரல்களோடு தன் விரல்களை கோர்த்து இறுக்கினான்.

அவனுடைய நெருக்கமும், செயல்களும் அவளுள் அனலை மூட்ட, தன்னை நிதானிக்கும் வழியறியாது தவித்தவள் அவனிடமே குமைந்தாள்.

"ப்ச்... முதலில் கையை விடுங்கள்!"

"முடியாது... இன்று பிடித்த இந்த கரத்தை வாழும் காலம் முழுவதும் விடாமல் என்னுடனே தான் நான் பிணைத்துக் கொள்வேன்!" என்று உரிமையாய் மொழிந்து அதில் தன் இதழ் தடம் பதித்தான் ஜெய்சங்கர்.

'ஐயோ... இன்றைக்கு என்ன இவன் ஒரு மார்க்கமாகவே நடந்துக் கொள்கிறான்? விவரம் தெரியாமல் கைப்புள்ளை ரேன்ஜுக்கு வந்து தனியாக சிக்கி கொண்டோமோ...'

"உண்மை... என்னுள் உறங்கி கொண்டிருந்த காதல் மிருகத்தை நீ ரொம்ப தான் சீண்டி தட்டி எழுப்பி விட்டாய்!" என்று அவள் மைன்ட் வாய்ஸை கேட்ச் செய்த ஜெய் அவளை அப்படியே கதவின் மீது சாய்க்க, இம்முறை சற்று மிரண்டு தான் போனாள் மணிகர்னிகா.

"ஹேய்... எ... என்ன... விட்டால் நீங்கள் ரொம்ப தான் உளறுகிறீர்கள், இப்பொழுது ஒழுங்காக என்னை விட்டு விடுங்கள். இல்லை... கத்தி ஊரை கூட்ட முடியவில்லை என்றாலும் பரவாயில்லை பக்கத்தில் இருக்கும் திலக்கையாவது அழைத்து விடுவேன்!" என்று மிரட்டியபடி தன் மேல் கிட்டத்தட்ட சாயும் நிலையில் இருந்தவனை தன்னிடமிருந்து விலக்க முயன்றாள்.

"செல்லம்... என்ன நீ கொஞ்சம் கூட விவரமே இல்லாமல் இருக்கிறாய், நீ கத்துகிற வரை நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன் என்று நினைத்தாயா? எங்கே வாயை திறந்து பார்... என்ன நடக்கும் என்பது அப்பொழுது தெரியும்!" என்று கண்ணடித்தான்.

என்னை தெரியுமாWhere stories live. Discover now