பகுதி - 5

1K 92 59
                                    

மயங்கிய சரியத் தொடங்கியவனை தாங்கிப்பிடிக்க சென்ற மேனேஜரை கண்டித்த செழியனின் பார்வை சித்தார்தை நோக்கியது, அவனது ஆணையை புரிந்து கொண்டது போல வேகமாக வெளியே சென்று ஒரு கான்ஸ்டெபிலை அழைத்து வந்தான் சித்தார்த்.

" இந்த பையன அந்த ரூம் ல கொண்டு போய் குடிக்க எதாவது குடுங்க, நான் வர்ர வரைக்கும்  அவனுக்கு துணையா இருங்க ," என்று அந்த கான்ஸ்டெபிலுக்கு கட்டளையிட்டு விட்டு மற்றவர்களை நோக்கி திரும்பியவன்," இதோ பாருங்க ஒரு வீட்ல வேலை செய்றவங்களுக்கு அந்த குடும்பத்தை பத்துன நிறைய விஷயங்கள் தெரிஞ்சிருக்கும், உங்களுக்கு தெரிஞ்ச விஷயங்களை தயங்காம எங்களுக்கு தெரியப்படுத்துங்க, உங்க பேரு வெளிய தெரியாது அதுக்கு நான் பொறுப்பு," என்று கூறிவிட்டு திரும்புகையில் மேனேஜரின் குரல் அவனை தடுத்தது.

" சார்.... ஒரு சின்ன சந்தேகம் கேட்கலாமா??"

" ம்ம்.... சொல்லுங்க மனோஜ் ",என்று செழியனின் பதிலிற்கு ஒரு முழு நிமிடம் மௌனம் காத்த அவர் பின் தைரியத்தை வரவழைத்துக்கொண்டது போல ," ஏதோ நடக்கக்கூடாதது நடந்திடுச்சு னு புரியுது, ஆனால் என்ன நடந்துச்சு னு நாங்க தெரிஞ்சுக்கிடலாமா?" என்று வினவினார்.

மேனேஜரிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்காத செழியன் அங்கிருந்த அனைவரையும் நோக்கினான், அந்த பெரிய வரவேற்பறையில் அந்த இல்லத்தின் எட்டு உதவியாளர்களும் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்க அனைவரும் அவனை கேள்வியுடன் நோக்கினர்.

மேனேஜரின் கேள்விக்கு பதிலலிக்காத செழியன் சித்தார்தை நோக்கி," அமைச்சரோட குடும்ப உறுப்பினர்களெல்லாம் எங்கே ? " என்று வினவினான்.

" அவங்க எல்லாம் பக்கத்து வரவேற்பறையில இருக்காங்க, கூப்பிடவா சார்,"

" இந்த வீட்ல இந்த நிமிஷம் யாரெல்லாம் இருக்காங்களோ அவ்வளவு பேரும் இப்ப இங்க வந்தாகனும்," என்று உறுதியான குரலில் கூறினான் செழியன்.

அந்த பெரிய வரவேற்பறை  அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆட்களால் நிறைந்தது.  அனைவரையும் ஒரு முறை நோட்டம் விட்ட செழியன் தன் வழக்கமான கர்ஜனை குரலில்," அமைச்சர் வீட்ல இன்னைக்கு நடக்க இருந்த கல்யாணம் நடக்கலை அது ஏன் னு உங்கள்ள யாருக்காவது தெரியுமா??"  என்று அங்கிருந்தவர்களை பார்த்து கேட்டான்.

மூன்றாம் கண்( முடிவுற்றது)Where stories live. Discover now