பகுதி -12

1K 86 53
                                    

தன்னையே குழப்பிய தன் நண்பன் ராமை சிறு புன்னகையுடன் ஏறிட்ட செழியன் ," நீ சொல்ற எல்லாமே சரிதான் ராம் ஆனால் சுதீபிற்கு கொடுக்கப்பட்டது சையனைட் விஷம் அது உடம்புக்குள்ள போயி வேலை செஞ்சு மனுஷனோட கடைசி மூச்சு அடங்க பதினெட்டு நிமிஷம் ஆகும்.

ஒரு மனுஷனோட உடம்புக்குள்ள சையனைட் போகுது அப்படீனா அது என்ன செய்யும் தெரியுமா முதல்ல ரத்தத்தோட கலந்திடும் , நம்முடைய ரத்தம் தான் உடம்பில இருக்குற எல்லா முக்கியமான உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் எடுத்துட்டு போகுது.இந்த சையனைட் ரத்தத்தில கலந்ததும் ஆக்சிஜன ப்ளாக் பண்ணிடும்.அதனால நமக்கு தேவையான உயிர் மூச்சு கிடைக்காம ஒவ்வொரு உறுப்பா இறக்க ஆரம்பிக்கும்.

முதல்ல விஷம் சாப்பிட்டதும் அவனோட தொண்டையில ஒரு வித எரிச்சல் ஏற்படும் அதுக்கப்பறம் தலை சுத்தல் வாந்தி மயக்கம் போன்ற அறிகுறி ஏற்படும் அப்பறம்  மூச்சு விட கஷ்டமா இருக்கும் கடைசியா வலிப்பு வந்து இதயத்துக்கும் நுரையீரலுக்கும் தேவையான ஆக்சிஜன்  தடைபட்டு  மரணம் சம்பவிக்கும், இப்படிபட்ட போராட்டங்கள்ல இருக்கிற ஒருத்தனால தன்னுடைய லாப்டாப் ல ஒரு பட்டன கூட அழுத்த முடியாது, " என்று தன் பக்க வாதத்தை கூறினான்.

" செழியா சொன்னா அது தப்பாகாது ," என்று கூறியவாறு ," அடுத்த என்ன செய்யனும் செழியா  இன்னைக்கு முழுக்க உன் கூட தான் இருக்கப்போறேன்,"

" தாராளமாடா அது என் பாக்கியம், சுதீபோட நண்பர்கள் மூனு பேர விசாரிக்கனும் , இவங்க மேல தான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு ,அதுகப்பறம் சுதீபோட காதலி நிலையை கேட்கனும் , " என்று கூறியவன் சித்தார்தை அழைத்தான்.

" என்ன சித்து சுதீபோட ப்ரெண்ட்ஸ் வந்துட்டாங்களா??"

" உதய் மட்டும் தான் வந்திருக்காரு சார் மத்த இரண்டு பேரும் இன்னும் வரலை," சித்து.

" சரி உதயை நீங்க விசாரிங்க முருகனோட உடலை போஸ்ட்மார்டத்திற்கு அனுப்பியாச்சா??செழியன்.

மூன்றாம் கண்( முடிவுற்றது)Where stories live. Discover now