பகுதி 8

1K 85 84
                                    

செழியனின் சரமாரி கேள்விகளை சற்றும் எதிர்பார்க்காத அம்மூவரும் தங்களின் முகங்களில் அப்பட்டமான அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.

" சார் நீங்க இப்படி அநியாயமா....எங்க மேல பழி போடக்கூடாது, எங்களோட நண்பன நாங்க எதுக்கு கடத்தனும், மறைச்சு வைக்கனும்," என்றான் அங்கிருந்த மற்றொருவன்.

"நீங்க யாருங்க சார்??" என்ற செழியனின் நக்கலான கேள்விக்கு, " நான் உதய் சுதீபோட பிசினஸ் பார்டனர்," என்று பதிலளித்தான் இரண்டாமவன்.

"ம்...இப்ப சொல்லுங்க உங்க நண்பனை எங்க கடத்தி வச்சிருக்கீங்க??? ஓ...சாரி அப்படி சொல்லக்கூடாதுல ,  மறைச்சு வச்சிருக்கீங்க??" என்று மீண்டும் வினவினான்.

"சார் இது அபாண்டம் உங்களுக்கு சரியான குற்றவாளி கிடைக்கலைனா , பழியை எங்க மேல போடக்கூடாது." குரலை உயர்த்தி கோபமாக கத்தினான் மூன்றாமவனான உமேஷ்.

தன் நிதானமான பார்வையால் அம்மூவரையும் பார்த்த செழியன்,"நான் கேட்குற கேள்விக்கு நீங்க சொல்ற பதில வைச்சு தான் உங்கமேல நான் பழி போடறதா? இல்லை பாவம் போடறதா னு  முடிவு பண்ணணும்," என்று அடக்கப்பட்ட கோபம் குரலில் தெரிய கூறினான்.

" சார் நீங்க நினைக்குற மாதிரி இல்லை, சுதீபோட காதலி மும்பையை சேர்ந்த பொண்ணு அதனால தன்னுடைய கல்யாணமும் வடநாட்டு கலாசாரத்துப்படி நடக்கனும் னு சுதீப் ஆசைப்பட்டான். அவனுக்கு 6 நாளுக்கு முன்னாடி தான் நிச்சயம் முடிஞ்சது, அடுத்த நாள் ஹல்தி ஃபங்ஷன்,( haldi function) அப்பறம் மெஹந்தி ஃபங்ஷன், சங்கீத் ஃபங்ஷன் அப்படீனு ஒவ்வொரு நாளும் விழா மாதிரி இருந்தது, இன்னைக்கு கல்யாணம் அதனால நேத்து எந்த ஃபங்ஷனும் இல்லை ராத்திரி பத்து மணி வரை அவன் கூட இருந்து அரட்டை அடிச்சிட்டு தான் நாங்க மூனு பேரும் வீட்டுக்கு போனோம்.இன்னைக்கு காலையில ஏழு மணிக்கு முஹூர்த்தம் அதனால நேர மண்டபத்துக்கு வர சொல்லிட்டான்,அங்க போய் பார்த்தா கல்யாணம் நடக்காது னு சொன்னாங்க அதுனால நேர வீட்டுக்கு வந்தோம் ஆனால் வீட்டுக்குள்ள யாரையும் அனுமதிக்கல கொஞ்ச நேரத்துக்கு அப்பறம் அமைச்சர் வாசிச்ச உரையை கேட்டு குழம்பி போய் வீட்டுக்கு போய்டோம்," என்று கூறினான் சுதீபின் பிசினஸ் பார்ட்னர் உதய்.

மூன்றாம் கண்( முடிவுற்றது)Where stories live. Discover now