3

782 46 62
                                    

இதுவரை: பிருத்வியை பின்தொடரும் பொழுது சிக்கும் ஸ்ரேயா, அவளை காக்கும் குணால்..

______________________________________

இனி,

ஸ்ரேயா: வா என் கூட

குணால்: எங்கே ஸ்ரேயா?

குணாலின் கை யை பிடித்து தர தர வென இழுத்துச் சென்ற ஸ்ரேயா, கடைசியில் ஒரு தள்ளுவண்டி கடை முன் நின்றாள்..

குணால்: என்னாச்சு ஸ்ரேயா? நடக்க முடியலியா?

ஸ்ரேயா: லூசு , இந்த கடைக்கு தான் உன்னை கூட்டிட்டு வந்திருக்கேன்.

குணால்: எதுக்கு?

ஸ்ரேயா: எனக்கு உதவி செய்யறவங்களுக்கு 2 செட் பானி பூரி வாங்கி தர்றது என்னோட பழக்கம்..அதான் உன்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்..

குணால்: வித்தியாசமா இருக்கே இந்த பழக்கம்..ஒருவேளை அவங்களுக்கு பானி பூரி புடிக்கலனா?

ஸ்ரேயா: குல்ஃபி ஐஸ் வாங்கி தருவேன்.

குணால்: ஒருவேளை அவங்களுக்கு டான்சில்ஸ் இருந்தா?

ஸ்ரேயா: விஷம் வாங்கி தருவேன்..இப்ப எதுக்கு இப்படி துருவி துருவி கேள்வி கேக்கற குடுமி? குப்பு அண்ணா மூனு செட் பானி பூரி.

குணால்: எப்பா உன்கிட்ட உஷாரா தான் இருக்கனும் போல...சரி மூனு எதுக்கு நம்ம 2 பேர் தான இருக்கோம்?

அவன் மண்டையில் ஓங்கி கொட்டினாள் ஸ்ரேயா..

குப்பு: ஸ்ரேயா கண்ணு பாவம் வலிக்கப் போகுது.

குணால்: ம்ம்ம் வலிக்குது..எதுக்கு இப்ப கொட்டின ஸ்ரேயா?

ஸ்ரேயா: உன் கிட்ட இப்ப தான சொன்னேன்..உதவி செய்றவங்களுக்கு 2 செட் னு..உனக்கு மட்டும் வாங்கி குடுத்திட்டு நீ சாப்பிடறத நான் வேடிக்கை பார்க்கனுமா? மக்கு...

குணால்: ஓஓஓ சரி ஸ்ரேயா..அப்ப மூனு தான்.. :)

தட்டில் வைத்த பானி பூரியை, குணால் வாயருகே கொண்டு செல்வதற்குள் , புதினா தண்ணீரின் கனத்தால் பூரி உடைந்தது..

மாங்கல்யம் தந்து னானேனா 💕🔔🔥🎊🎉😍Where stories live. Discover now