4

716 54 37
                                    

இதுவரை: ஸ்ரேயா குணாலிடம் தன் திருமண திட்டமிடும் மையம் பற்றியும், பிருத்வி பற்றியும் கூறுகிறாள்.. பின் குணாலை ரேஷ்மாவின் வீட்டின் மாடியில் உள்ள விருந்தினர் வீட்டில் தங்க வைக்கிறாள்.

______________________________________

இனி,

ரேஷ்மா: ஏய் ஸ்ரேயா. பயமா இருக்குடி..இதோ இப்ப ரிசப்ஷன். நாளைக்கு கல்யாணம்.. நான் பேசாம ஓடி போய்டவா டி?!! என்னால அவனை கல்யாணம் பண்ணிக்க முடியாது.

ஸ்ரேயா: ஏய் லூசு மாதிரி பேசாத. ரிசப்ஷன் வேணா பிருத்வியோட நடக்கலாம். ஆனால் உன் கல்யாணம் கௌதம் கூட தான்.. நான் இருக்கேன்.. என்னை நம்பு.. இன்னொரு தடவை இப்படி லூசு மாதிரி பேசின அறைஞ்சிடுவேன்..

ரேஷ்மா: சரி டி உன்னை தான் நம்பி இருக்கேன்..

ரேஷ்மாவின் அம்மா: ரேஷ்மா, ஸ்ரேயா இன்னும் ரூம்ல என்ன பண்றீங்க.. மாப்பிள்ளை அங்க வந்துட்டாரு.. சீக்கிரம் வாங்க.. ஸ்ரேயா அவளை கூட்டிட்டு வா மா..

ஸ்ரேயா: சரி ஆண்டி.. நீங்க போங்க.. இதோ வர்றோம்..

ரேஷ்மா: இவங்க வேற.. மாப்பிள்ளை மூப்பிள்ளை னு அந்த பொருக்கிக்கு மரியாதை குடுக்கறாங்க...

ஸ்ரேயா: ஏதும் பேசாம வா.. அந்த பொருக்கி என்ன சொன்னாலும் கண்டுக்காத இரு.. எல்லாம் நாளை காலை வரைக்கும் தான்..

பிருத்வி தன் அருகில் வந்து நின்ற ரேஷ்மாவை துச்சமாக பார்த்தான்..

நமுட்டுச் சிரிப்பு சிரித்தவன்,

பிருத்வி: நாளைக்கு நீ எனக்கு ஒய்ப் ஆயிடுவ.. அப்புறம் நீ permanent சேனல்.. என் கேர்ல்பிரெண்ட்ஸ் லாம் temporary சேனல்.. ஹ்ம்ம்..

ரேஷ்மா: பற்களை கடித்தாள்..

பிருத்வி: என்ன பல்லை கடிக்கிற போல.. திட்டனும்னு தோணுதா?!! திட்டு செல்லம்.. ஆனால் உன் வீடியோ என் pendrive ல இருக்குன்றதை மறந்துடாத😏

ரேஷ்மா கண் கலங்கினாள்.

பிருத்வி: கல்யாணம் முடியட்டும்.. அப்புறம் பாருடி..

மாங்கல்யம் தந்து னானேனா 💕🔔🔥🎊🎉😍Where stories live. Discover now