விமர்சனம்

254 33 26
                                    

அந்த இடமே மயான அமைதியாக இருந்தது.. இன்னும் சொல்லப்போனால் அதுவே மயானம் தான், சுற்றிலும் இருட்டு, மணி நள்ளிரவு இரண்டை தாண்டியிருக்கும்.
தூரத்தில் ஏதோ ஊளையிட்டது. ஓநாயோ வெறும் நாயோ இல்லை வேறு என்னவோ அதை பற்றியெல்லாம் யோசிக்க அவனுக்கு நேரமில்லை, மூச்சிரைக்க, வியர்வை வழிய சம்மட்டியை தூக்கி எறிந்து விட்டு , தான் வெட்டிய குழியை ஆழ்ந்து பார்த்தான், கண்ணை மறைத்த வியர்வையை சட்டையை இழுத்து துடைத்துக் கொண்டு, குழியில் மண்டியிட்டான், ஒரு முறை அக்கம் பக்கம் ஆள் யாரும் தென்படுகிறார்களா என பார்வையை வீசி விட்டு, மெல்ல குழியை முகத்தால் நெருங்கினான், குழிக்குள் முழு முகமும் முங்கிய பின் , இதழை லேசாக திறந்தான்,

" யாருடா அது… " பகீரென இருந்தது, வெடுக்கென முகத்தை தூக்கி பார்த்தான், முழு போர்வையில் உடலை மறைத்துக் கொண்டு கையில் கம்புடன் ஒரு முரட்டு ஆசாமி.. பிணத்தை அடக்கம் செய்பவர்.. இவன் எப்படி திடீரென வந்தான் என யோசிப்பதற்குள்,

" டேய் கேக்குறேன்ல வாயில என்ன மண்ணா கிடக்கு.. "

" ஐயா அது வந்து.. "

" அடப்பாவி குழியெல்லாம் தோண்டி வச்சுருக்க.. யாரை புதைக்க வந்த.. யாரை கொன்ன.. ரேப்பிஸ்ட் தானே நீ.. "

" அய்யோ… ஐயா நான் ரேப்பிஸ்ட்லாம் இல்லீங்க.. கவர்மெண்ட் ஆபீஸ்ல டைப்பிஸ்ட்டா இருக்கேங்க.. "

" டைப்பிஸ்ட்க்கு நடுராத்திரி சுடுகாட்டுல என்னடா வேலை.. "

" ஒரு கருத்து சொல்லனும்ங்க.. என் சொந்த கருத்து அதான்.. நீங்க அனுமதிச்சா… "

" சொந்த கருத்தா.. சந்தேகமா இருக்கே.. நீ உன் முழு கதையும் சொல்லு.. அப்புறம் பாப்போம் "

மறுபடியும் முதலில் இருந்தா என்று மனம் அங்களாய்த்தாலும் அலுத்தப்படியே தொடங்கினான்.

" எனக்கு சின்ன வயசுல இருந்தே பரோட்டான்னா உசுருங்க.. எங்கே பரோட்டா கடையை பாத்தாலும் வாங்கி திம்பேன்.. கேள்வி பட்டா கூட தேடி கண்டு புடிச்சு திம்பேன்..  அப்படி தான் அன்னைக்கும்.. " என அவன் மேலே பார்க்க , சுடுகாட்டு காவலனும் மேலே பார்க்க… நாமும் மேலே பார்ப்போம்.

என் சிறுகதைகள்Where stories live. Discover now