ஏன்னா எலியும் பூனை தீவும்

105 9 0
                                    

இந்திய பெருங்கடலின் ஏதோ ஒரு மூலையில் ஒரு சின்னஞ் சிறிய தீவு இருந்தது. அந்த குட்டி தீவின் கடற்கரையில் வெள்ளை நிற மணல் வெயிலில் வெள்ளி போல மின்னியது. அலைகள் மெதுவாக மணலை தொட்டு விளையாடி கொண்டிருந்தன. அலைகளில் ஒன்று ஒரு மரப்பெட்டியை தீவின் கடற்கரையில் தள்ளியது. முதலில் அசைவற்று இருந்த அந்த மரப்பெட்டி திடீரென அசைய தொடங்கியது. பின் வேகமாக அசைய தொடங்கியது. சில நொடிகளில் ஆடவே தொடங்கி விட்டது. திடீரென

 மரப்பெட்டியை உடைத்துக் கொண்டு அதிலிருந்து ஒரு சுண்டெலி வெளிப்பட்டது. 

மரப்பெட்டியின் மேல் நின்றபடி தீவை எட்டி பார்த்த சுண்டெலி, படாரென அங்கும் இங்கும் ஓட தொடங்கியது. இத்தனை நாட்களாக மரப்பெட்டியிலே குடியிருந்த அதற்கு சுதந்திர தீவை கண்டதும் உற்சாகம் தாங்கவில்லை..

 தண்ணீர்.. தண்ணீர் என அலைந்த அதன் கண்களுக்கு ஒரு நீரோடை தெரிய அதில பாய்ந்து விழுந்து தன் தாகத்தை தீர்த்து கொண்டது.. அடுத்த கணமே பசி எலியின் வயிற்றை கிள்ள, எங்கு உணவு.. எங்கு உணவு என தேடியது. அப்போது தான் கவனித்தது அந்த தீவு முழுவதுமே பல மரங்களால் நிறைந்திருந்ததை கவனித்தது. மரத்திலிருந்து விழுந்த காய்கள். தீவின் தரை முழுவதும் கொட்டி கிடந்தன… பாய்ந்து புரண்டு ஒவ்வொன்றாய் கடித்து தின்று தன் பசியை போக்கி முடித்தது எலி.. 

அப்பாடா என அது மரத்தடியில் படுத்திருக்க தூக்கத்தில் கண் சொக்கியது. சிறிது நேரம் தூங்கியிருக்கும், சட்டென அருகில் ஒரு சலசலப்பு சத்தம் கேட்க துள்ளி எழுந்தது. கையில் ஒரு குச்சியை  எடுத்து கொண்டு.. சலசலப்பு கேட்ட இடத்தை நெருங்கியது.

" யாருடா அது.  மரியாதையா வெளிய வாடா.. " தன் மீசையை முருக்கியபடி எலி நிற்க, புதரிலிருந்து ஒன்று அல்ல, நூறு எலிகள் வெளிப்பட்டன, அத்தனை எலிகளும் சுண்டெலியை சுற்றி வளைக்க , தான் வைத்திருந்த குச்சிக்கு பின் பதுங்கி பவ்யமாக நின்றது சுண்டெலி.அதற்கு பயம் தொண்டையை அடைத்தது.

என் சிறுகதைகள்Where stories live. Discover now