1

13.8K 144 18
                                    

"அப்பா! இப்போ என்னப்பா அவசரம்? இப்போ தான் வேலைக்கு போக ஆரம்பிச்சிருக்கேன். அதுக்குள்ள கல்யாணம்னு சொல்றிங்க? " என்றாள் மிருதி தன் கனவு நிராசையாய் போவது போல் எண்ணி..

"டேய்! பொண்ண பெத்த அப்பனோட கனவே பொண்ணுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு தரனும்னு தான்டா. நீ படிக்கணும்னு ஆசைப்பட்ட, படிக்க வச்சேன். அது எதுக்குன்னா உன் சொந்தக்காலில் உன்னால நிக்கமுடியும்னு உனக்கு நம்பிக்கை கொடுக்க தான்." என்றார் மகளின் தலையை கோதியபடி சீனிவாசன்.

"ஹ்ம்ம்... ஏன்பா எனக்கு இன்னும் கல்யாணம் பண்ணலைன்னு யாராவது ஏதாவது சொல்றாங்களா?" என்றாள் சந்தேகமாக.

"அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா உனக்கும் வயசாகிட்டே போகுது. " என்றார்.

சிறிதுநேரம் அவரையே பார்த்து கொண்டிருந்தவள்.

"சரிப்பா. நான் கல்யாணம் செஞ்சுகிட்டா உங்களுக்கு சந்தோஷம்னா நான் பண்ணிக்கிறேன்." என்றாள் மிருதி.

"மிருதிக்குட்டி நிஜமாவாடா. எனக்கு ரொம்பக சந்தோஷம்டா" என்றார் விழிகளில் மகிழ்ச்சி நீரோடு.

"உங்க அத்தைக்கு உன்னை மருமகளாக்கிகனும்னு ரொம்ப ஆசை. உனக்கு படிப்பு முடிஞ்சதுலர்ந்து கேட்டுட்டே இருக்கா. நான் தான் கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லிருந்தேன். நீயும் சம்மதிச்சிட்ட. இனி எல்லாம் நல்லபடியா நடக்கணும்." என்றார் சந்தோஷமாய்.

"யாரு அந்த நெட்ட கொக்கா மாப்பிள்ளை. இதுக்கு நீங்க என்னை பாழுங்கிணத்துல புடிச்சி தள்ளிவிடலாம்பா. அவனுக்கும் எனக்கும் சின்ன வயசுல இருந்தே ஆகாது. அவனை என்னால கல்யாணம் பண்ணமுடியாது." என்று பொறிந்தாள் மிருதி.

"மிருதி மாப்பிள்ளையை அப்டிலாம் பேசக்கூடாது. சின்ன வயசுல போட்ட சண்டையை வச்சு இப்போ யாராவது முடிவு பண்ணுவங்களாம்மா? இப்போ பையன் ரொம்ப பொருப்பாய்ட்டான். ஆஸ்திரேலியால இருக்கான்." என்றார் பெருமையாய்.

"என்னது ஆஸ்திரேலியாவா? என்னப்பா என்னை அவ்ளோ தூரம் கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்கணும்னு எப்படிப்பா முடிவு பண்ணிங்க?" என்றாள் அழ தயாராக.

தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு)Where stories live. Discover now