தீயாய் சுடும் என் நிலவு 3

4.5K 142 12
                                    

கூறிய நேரத்திற்கு அரைமணி நேரம் முன்னதாகவே வந்து விட்டிருந்தாள் மிருதி.

மனது ஏனோ படபடவென அடித்து கொண்டது. ஓராயிரம் முறை தனக்குள் இது சரி வருமா என்று கேட்டுக்கொண்டாள்.

'வேறவழி இல்ல.' என்று மனது உறுதி செய்ய சிலையாக அமர்ந்திருந்தாள்.

கைகடிகாரத்தை நோக்க மணி 3.00 என்றது.

வருடங்கள் மூன்றாய் கடந்து சென்றிருக்க, அவனின் வருகையை எண்ணி பரபரத்து உயிர் சிலிர்த்தெழுந்தது.

'எதுக்கு இப்போ ஓவரா எக்ஸைட் ஆகற? என்ன பேசனுமோ அதை மட்டும் பேசிட்டு கிளம்பிட்டே இரு.' என்றது மூளை.

அவளின் எண்ணங்களை கலைக்கும் விதமாக போன் அடிக்க எடுத்தாள்.

"ஹெலோ" என்றாள்.

"ஹலோ" என்ற மென்மையான குரலை கேட்டவுடன் உள்ளுக்குள் ஒரு உணர்வு தோன்ற, ஒரு நிமிடம் தடுமாறி அமைதியானாள்.

"ஹலோ. மிரு லைன்ல தான இருக்க?" என்றான் மீண்டும் மென்மையாய் தீரன்.

"ஹ்ம்ம்.. இருக்கேன் சொல்லுங்க" என்றாள் குரலில் எந்த உணர்வுகளையும் வெளி காட்டாமல்.

"சாரி மிரு" என்றான் மிருதுவான குரலில்.

இந்த அக்கறை நிறைந்த பாசமான விசாரிப்புகளுக்காக ஏங்கி ஒரு காலத்தில் தவம் கிடந்தது போய் இன்று பாறையாய் இருக்கும் மனதுக்குள் வேரிட நினைக்கும் செடியை முளையிலேயே கிள்ள நினைத்தாள்.

"எக்ஸ்கியூஸ் மீ. மிஸ்டர்.தீரன் என்னோட பேரு மிஸ்.மிருதி. சோ கால் மீ மிருதி. தட்ஸ் இட். எனக்கு நெருக்கமானவங்க தான் என்னை பெட் நேம்ல கூப்பிட முடியும்" என்றாள் காட்டமாய்.

"சாரி மிருதி. என்னை மன்னிக்கவே மாட்டியா? இந்த ரெண்டு வருஷமா உன்னோட மன்னிப்புக்காக காத்திட்டு இருக்கேன்." என்றான் உடைந்த குரலில்.

'என் உயிர் இருக்கிற வரைக்கும் உங்களை காதலிச்சிட்டே தான் இருப்பேன். ஆனா, நீங்க எனக்கு ஏற்படுத்தின காயத்துக்கு மருந்தே கிடையாது. மன்னிப்பும் கிடையாது' என்று நினைத்தவள்.

தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு)Where stories live. Discover now