தீயாய் சுடும் என் நிலவு 24

6.2K 161 37
                                    

இரவு சாப்பிட மிருதியை எழுப்ப தூக்கத்திலிருந்து எழுந்தவள் அவனின் கையில் தட்டை பார்த்துவிட்டு "எனக்காக நீங்க இதை செய்ய வேண்டாம். உங்க பொண்ணுகூட டைம் ஸ்பெண்ட் பண்ணதானே வந்திங்க. அதைமட்டும் பாருங்க." என்று மெத்தையில் இருந்து இறங்க போனவளை தடுத்து அமர வைத்தான்.

"எதுக்கு பயபட்ற மிரு?" என்று அவளின் நெற்றியில் இருந்த கற்றை முடியை தன் ஒற்றைவிரலால் தீண்டியபடி ஒதுக்கிவிட மிருதியின் மேனியில் ஒரு தாக்கம் தென்பட்டதை உணர்ந்து மலர்ந்தான்.

"ஹ்ம்ம் நான் எதுக்கு பயப்படப்போறேன்? அதெல்லாம் ஒன்னுமில்லை" என்றாள் வேறெங்கோ பார்த்தபடி.

"அப்படியா?" என்று கேட்டவன் தன் ஆட்டகாட்டி விரலால் அவளின் முகத்தில் கோலமிட ஒரு நொடி திணறியவள் அதன்பிறகு, "இல்ல நீங்க எனக்காக வரலை" என்று அவனின் கரத்தை தட்டிவிட்டு முகம் திருப்பினாள் கண்ணீரை அடக்க.

"நான் எதுக்காக வந்துருக்கேன்னு உனக்கு தெரியாது இல்ல?" என்றான் அழுத்தமாய்.

பதில் எதுவும் கூறாமல் மிருதி வேறெங்கோ பார்த்து கொண்டிருக்க.

"உனக்கு எங்க என்கிட்ட உன்னை முழுசா இழந்துடுவியோன்னு பயம் அதான் பயபட்ற?" என்று சிரித்தான்.

மின்னல் தாக்க கட்டுண்டவள் போல் ஒரு நொடி அமைதியாக இருந்தவள். "அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. நீங்களா ஏதாவது ஒரு கற்பனை பண்ணிகாதிங்க" என்று முறைத்தாள்.

"மிரு உனக்கு உண்மையாவே புரியலையா? இல்லை புரிஞ்சும் புரியாத மாதிரி என்னை சோதிக்கிறியா? நீ இல்லாத ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு நரகமா இருக்குடி. எனக்கு பொண்ணு இருக்கான்னு தெரியாமயே உன்னை பார்த்தா போதும்னு ஓடி வந்தேன். எனக்கு மகள் இருக்கான்னு தெரிஞ்சவுடனே என் சந்தோஷத்துக்கும் துக்கத்துக்கும் அளவே இல்லை. சந்தோஷம் எனக்கு மகள் மனைவி இருக்காங்கன்னு.. துக்கம் ஒவ்வொரு புருஷனும் ஆசைப்பட்ற மாதிரி என் மக பிறக்கும்போது உன்கூட இல்லாம போனதுக்கு நானே காரணமாகிட்டேனேன்னு. இப்போக்கூட உன்னோட இருக்கலாம்ன்ற ஒரு பேராசைல தான் என் பொண்ணை காரணம் காட்டி உன்னை பார்த்துக்கிட்டே இருந்தாக்கூட போதும்னு வந்து இருக்கேன். நான் என்ன பண்ணா உனக்கு என்மேல கோபம் போகும்?" என்றான் தீரன்.

தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு)Where stories live. Discover now