தேடும் படலம் :27

847 72 48
                                    

எப்படியோ வீனாவை சமாளித்து விட்டோமென அனைவரும் பெருமூச்சு விட்டப்படி தங்கள் உறையாடலை தொடர்ந்தனர்...சரியாக உறங்காமலும் காயம் பட்ட வலியும் சேர்த்து வீரையும் தான்யாவையும் ஓய்விற்க்கு அழைத்துச்சென்றது....தங்களை அறியாமல் தான்யா வீரின் தோலிலும் வீர் தான்யாவின் தலைமேலும் தலை வைத்து உறங்கிக்கொண்டிருந்தனர்...திடீரென ரவி
What a lovely pose என கூறவுமே அவர்களை கவனித்தனர் மற்றவர்கள்...

அவர்களின் நிலையை படம்பிடித்த ரக்ஷா தன் போனில் அப்படத்தை நியாபகமாக சேமித்துக்கொண்டாள்....அதுவே நாளை இவர்களின் கேள்விக்கு பதில் என்று தெரியாமல்...

தான்யாவை கைதாங்கலாக அழைத்துச்சென்று அவள் படுக்கையில் படுக்கவைத்து மெதுவாக வெளியேறினான் ரவி....அற்க்குள் அடுத்த அறையில் வீரை படுக்க வைத்துவிட்டு வந்தான் ரனீஷ்....காலை ஆறு மணி ஆகியிருக்க...நாழ்வருக்கும் காஃபியுடன் வந்தாள் ரக்ஷா... ஹாஸ்பிட்டலிற்கு போன் செய்த ரனீஷ்...

எங்களாள கொஞ்ச நாள் ஹாஸ்பிட்டல் வர முடியாது....நீங்க பாத்துக்கங்க...பேஷன்ட்ட வீட்டுக்கே வர சொல்லி ஊர்ல அனௌன்ஸ் பன்னீருங்க...இம்பார்ட்டன்ட் கேஸா இருந்தா....Contact me immediately என்று உத்தரவுவிட்டுவிட்டு சோபாவில் பெருமூச்சுடன் வந்து அமர்ந்தான்....

ரவி : ஏன்டா இப்டி மூச்ச இழுத்து விட்ர???

ரனீஷ் : வந்து நாழு நாள் தான் ஆகுது...அதுக்குள்ள எவ்ளோ பிரச்சனை??? முடியல டா...

மற்றவர்களும் அதை அமோதிப்பதாய் தலை ஆட்டினர்...

வீனா : என்ன டா பன்றது??? விதி நடந்துதான ஆகனும்....

ரக்ஷா : ஆனா ஏன் மச்சி நமக்கு நடக்குது??? யாரந்த பேய்??? ஏன் அவ நம்மல தொரத்துரா???

ரவி : தெரியல டி...யார்ட்ட கேட்டா தெரியும்னு தெரியல...ஒரே கொழப்பமா இருக்கு....

வீனா: அந்த தாத்தா டா..

ரனீஷ் : எந்த தாத்தா வ டி சொல்ற???

வீனா : அதான்டா நேத்து அந்த லைன்ஸ் லாம் சொன்னாரே...

ரக்ஷா : கரக்ட்...

ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது)Where stories live. Discover now