பேயுக்கும் பேயுக்கும் சண்டை:39

852 81 84
                                    

தன் முன் ருத்திரமூர்த்தியின் மறு உருவம் பெண்ணாய் உருவெடுத்து வந்ததைப் போல் இருந்தது வனோஜாக்கு... கண்களிள் எரிமலை வெடிக்க... நரம்பு புடைக்க வெறித்திருந்தாள் அவள்....உயிருடன் இருந்தபோதே ஒவீயின் அதட்டலுக்கு நடுங்கும் வனோஜா... பேயாய் மாறினால் மட்டும் நடுங்க மாட்டாளா??? ஒவீயின் முறைப்பிலே பாதி சக்தியை பயத்திலே இழந்திருந்தாள்.... எறிந்து போன கைகள் இரண்டும் நடுங்க தொடங்கியது... யாரோ சங்கூதும் சத்தம் தெளிவாய் கேட்டது... வீட்டின் வாயிலில் புன்னகைத்தவாறு நின்றிருந்தார் அம்முதியவர்...ஒவீக்கு உண்மையை புரியவைத்தவர்... துன்பத்தில் நாயகர்களுக்கு உதவிய அதே முதியவர்...

அவர் ஒவீயை புதைத்த இரண்டு நாட்கள் பின் மரணமடைந்தவர்... ஏதோ ஒரு காரணத்தினால் மறுவாழ்ப்பேட்டையில் ஆத்மாவாய் சுற்றிக் கொண்டிருந்தார்... ஆத்மா என்பதால் ஒவீயை எளிதாக அறிந்துக் கொண்டார்.... வருடங்கள் களித்து வந்த நாயகர்களை காக்கவே காத்துக் கொண்டிருந்தார்... அவள் வரும் முன்பு அவர்களை எச்சரிக்கை செய்ய முனைந்தார்... ஆனால் அவரின் வார்த்தைகளை ரனீஷை தவிர்த்து மற்ற எவராலும் புரிந்துக் கொள்ள முடியவில்லை... நடந்ததை தெரிந்துக் கொண்டு அதை ஒவீக்கு புரிய வைத்து அவளின் தவறை உணர்த்தினார்... தன்னால் இயன்ற வரை கதறி அழுத ஒவீ... அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தாள்... மரணிக்கப்படும் ஆன்மா புவியில் மூன்று நாட்கள் கடவுலின் கட்டுபாடின்றி சுற்றி திரிந்து தான் நினைத்ததை நிறவேத்திக் கொள்ளும்... தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்துக் கொள்ளும் .... அது போலவே... வனோஜா... இறந்து.... ஆன்மாவாய் உருவெடுத்துவிட்டாள்.... இப்போது உன் சகோதிரியையும் அவளை சார்ந்தவர்களையும் கொள்ள வந்துக் கொண்டிருக்கிறாள் என கூறினார்.... நான் அவங்கள காப்பாத்த போறேன்... என கிளம்பியவளை தடுத்து...அது உன்னால் முடியாது.... நாளை காலை மூன்று மணி வரை... நீ வெரும் ஆத்மா தான் என்று அடுத்த குண்டை வீசினார்....அதனால் தான் அவர்கள் படும் அனைத்து துன்பங்களையும் கண்ணீர் சிந்த பார்த்துக் கொண்டிருந்தாள் ஒவீ...

ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது)Where stories live. Discover now