யாரால்? எதனால்?

448 38 26
                                    

பொதுவா எல்லாப் பொண்ணுங்களுக்குமே அவங்க டாடி தான் ஹீரோ. ஆனா எனக்கு என் டாடி மட்டும் தான் ஹீரோ.

அப்படி என் ஹீரோவோட பழைய டைரியை புரட்டினப்போதான் தெரிஞ்சது நான் ஏன் கதைக் கவிதைங்குற பேர்ல எதையோ கிறுக்கிட்டு இருக்கேன்னு. பிகாஸ் எங்க டாடிக்கு அவ்வளவுத் திறமை இருந்திருக்கு.

அப்போ நான் கேட்டேன் "இதை எல்லாம் யாராவது படிச்சிற்காங்களா" னு.

அதுக்கு "உன் அம்மாவைத் தவிர‌ வேற யாரும் இதைப் படிச்சது இல்லை. பாராட்டினதும் இல்லை. கமெண்ட் பண்ணதும் இல்லை" னு சொன்னாங்க.

ஏற்கனவே புக் போடலாம்னு இருந்த நான் இதைக் கேட்டதும் இன்னும் ஏன் தாமதிக்கனும்னு உடனே காரியத்தில் இறங்கிட்டேன்.

எல்லோருக்கும் எதுலையாவது, திறமையும் பேஷனும் இருக்கும். சிலருக்கு அதை வெளிப்படுத்தவதற்கான வாய்ப்பும், சூழ்நிலையும் அமைவதில்லை. இன்னும் சிலருக்கு தட்டிக்கொடுக்கவும், ஊக்கப்படுத்துவதற்கும் ஆள் இல்லை. இன்னும் பலரோட திறமைகள் யாருக்கும் தெரியாமலேயே, அவங்களுக்குள்ளேயே புதஞ்சு போய்டுது.

அப்படி என் ஹீரோவோட கவிதைகளும் வெறும் இந்த பழைய டைரி பேப்பரிலேயே யாருக்கும் தெரியாம மக்கி போய்டக் கூடாது.

என் அப்பாவுக்கு ஒரு மகளா நிறையயய்ய்ய்ய செய்யனும்னு எனக்கு ஆசை. அதோடச் சின்ன ஆரம்பமா தான் இது.

என்னால முடிஞ்சது நாற்பதாயிரம் பேருக்கு இல்லைனாலும், அட்லீஸ்ட் நாற்பது பேருக்காவது போய் சேரும்னு நம்புறேன் மக்களே.

இந்து புக்ல வரப் போற எல்லாக் கவிதையோட கிரெடிட்ஸும் என் அப்பாவுக்கு தான் போய் சேரும். டைட்டில் உட்பட. (பின் குறிப்பு: 97 என் அப்பா அம்மாவுக்கு கல்யாணம் நடந்த வருஷம். இதுல வரப் போற எல்லா கவிதையும் என் அம்மாவுக்காக எழுதினதானு கேட்டா.. அது எனக்குத் தெரியாது மக்களே..🙈)

வோட் பண்ணுங்க.. கமெண்ட் பண்ணுங்க மக்களே.. எனக்காக இல்லை.. இதை யாரும் பார்க்கக் கூட மாட்டாங்கனு என் ஹீரோ நினைச்சிட்டு இருக்குறதை மாத்துறதுக்காக. என் ஹீரோவுக்கு நான் கொடுக்குறச் சின்ன கிஃப்ட் இது. அதுக்காக..😊😊

❤️97'ல் தொலைந்த இதயம்❤️Where stories live. Discover now