நினைவுகள் 1

1.3K 48 21
                                    

கார் நேராக ரயில் நிலையத்தை அடைந்தது. "அக்க்ஷரா நீ முன்னாடி போ" என்று சொல்லிக் கொண்டே ஜெய் திரும்பிப் பார்க்க அங்கே அவள் இருந்த இடம் காலியாக இருந்து. "🤦‍♂️லூசு அதுகுல அவ பிரண்ட்ஸ் ச பார்க்க ஓடிட்டா" என்று சொல்லிக் கொண்டு காரை பார்க் செய்துவிட்டு ஜெய் உள்ளே சென்றான்.

அக்க்ஷராவை தேடிச் சென்ற அவன் 'நங்ங்' என்று அவள் தலையில் கொட்ட 🙆‍♀️அவளோ அவனை திரும்பிப் பார்க்காமலே "ஏன்டா எரும வளர்ற புள்ளைய அடிக்குற🤬🤬... " என்று கோபத்தொடு முறைத்தாள். "முறைக்காத டீ லூசு எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது😂... அப்பறம் என்ன சொன்ன என்ன சொன்ன🤨 வளர்ற புள்ளையா... அப்படி யாரும் என் கண்ணுக்கு தெரியலையே மா🧐... " என்று கிண்டலாக சிரித்தான்.

இவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர்களுக்கு தெரியாமல் பின்னால் இருந்து ஒரு கரம் ஜெய்யின் தலையில் 'நங்ங்... நங்ங்... ' என்று கொட்ட, அவன் " ஆஆஆ!!!..." என்று கத்தினான். இருவரும் யார் என திரும்பி பார்க்க மற்றொரு கரம் அவன் கன்னத்தில் மேலும் 'பலார்ர்...' என்று அறைத்தவளை பார்த்து அக்க்ஷரா உற்சாகமாக "ஹாசினி!!!..." என்று உரக்கக் கூறி அவளை அனைத்துக் கொண்டாள். சிறு நொடிகளில் மீண்டும் அவளது கண்கள் அலைபாயத் தொடங்கியது "ஹாசினி எங்கடி அவவ... ஆஆஆஆ" யாரோ தன் கூந்தலை பின்னால் இருந்து இழுக்க, 'பூம்ம்ம்!!!....' என்று காதில் கத்திய பிரியாவை பார்த்த அக்க்ஷராவின் முகம் பிரகாசத்துடன் "ப்ரி... " என்று மகிழ்ச்சியுடன் அவளை கட்டித் தழுவினாள்.

ஜெய் 'கடவுளே!!... நல்லவேள இப்போதிக்கு இதுங்க கிட்ட இருந்து என்ன காப்பாத்திட்ட...' என்று மனதுக்குள் பேச, "என்ன ஜெய் எப்படியோ தப்பிச்சிட்ட போல" என்று பின்னால் இருந்து வந்த குரலை கேட்டு திரும்பிய அவன் தன் அத்தை, மாமாவை(நதியா,விக்ரம்) கண்டு அவர்களை மகிழ்ச்சியுடன் நலம் விசாரிக்க சென்றான். ஜெய் " இந்த மூன்று தேவியரும் இப்போதிக்கு நம்மள கண்டுக்க மாடங்க மாம்ஸ்... நாம தான் கூப்பிடனும்" என கூற, "அக்க்ஷரா.." என குரல் கேட்டு திரும்பியவள் தன் அத்தை, மாமா விடம் செல்லம் கொஞ்ச ஆரமித்தால். பிறகு பெரியவர்கள் வீட்டிற்கு செல்ல. சிரியவர்கள் நால்வரும் தங்களுக்கு மிகவும் பிடித்த மற்றும் அவர்களுக்கு மட்டும் தெரிந்த ஒரு ரகசிய இடத்திற்கு சென்றனர்.

வீட்டில் தனது பெண் ஓடிப்போயிருப்பாலோ என்று நினைத்த தன் தாயின் சந்தேகத்தை பார்த்த வெங்கட்ராம் (அக்க்ஷராவின் அப்பா தேடுவதை போல் நடித்தவர்.அவருக்கு தெறியும் தன் மகள் எங்கு சென்றால் என்று) கோபமாக, "அம்மா😡!!!..." என கூற, "மீனாட்சி..." என்று அழுத்தமான தன் தந்தையின் குரலை கேட்டு அமைதி ஆனார். அப்போது வீட்டு வாசல் முன்பு வந்து நின்ற வண்டியை பார்த்த அனைவரும் அந்த காரில் இருந்து இரங்கியவர்களை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் திகைத்து நிற்க, எல்லார்க்கும் அக்க்ஷராவின் செயல் எதற்கு என்று அனைவருக்கும் புரிய வந்தது. இதை உணர்ந்த மீனு பாட்டிக்கோ கஷ்டமாக இருந்தது.

Please comment &vote பன்னுங்க என் தவர்களை திருத்திக்கொள்ள முடியும்.

நினைவுகள் நிஜமாகும்(on Hold)Where stories live. Discover now