" காட்டான்... காட்டான். தடிப்பயலே. உடம்பை அர்னால்ட் மாதிரி வளர்த்து வைத்துக்கொண்டு, என்னையும் பார் என் அழகையும் பார் என்று அதை வெளியே காட்டிக்கொண்டு இப்படி நடு தெருவில் சண்டைபோட்டுக்கொண்டு கட்டிபுரள்கிறாயே எருமை மாடே. நீயெல்லாம் எனக்கு பிரெண்ட் என்று என்னால் வெளியே சொல்லிக்கொள்ள முடியுமா?
திமிரெடுத்து அடிபிடிப்போடுகிறவன் போட்டுதொலையட்டும் என்று விடாமல் இவன் வேறு ' ஆஷு வந்திரு வந்திரு'
என்று மூச்சுவிடாமல் கத்தி என் காதில் ரத்தம் வர வைக்கிறான். எருமைமாடுகளா !!! இவனால் சண்டை போடாமல் இருக்க முடியவில்லை என்றுதானே பாக்சிங்கில் கொண்டு போய் தள்ளிட்டு வந்தேன். அங்கேயும் இருக்கும் எல்லோரின் முஞ்சையும் உடைத்துவிட்டு வந்துட்டான்.எங்கேயாவது உண்டாடா? கோச்சிங்கிற்கு என்று கொடுத்த பணத்தை திருப்பி கொடுப்பது. நான் கட்டிய பணத்திற்கு இரண்டு மடங்கு அதிகமா தந்து அம்மா தாயே இவனை கூட்டிட்டு போன்னு கையெடுத்து கூப்பிடுறான் அந்த கோச். முடியலடா சாமி. இவனுக்கு என்னதான் வேணுமாம். கடன்காரன் என் ஜீவனை வாங்குறான். கிளாஸை பாதியில் விட்டுட்டு வந்திருக்கிறேன் " என்று விடாமல் பொரிந்து தள்ளும் ஆஷ்னாவை பொருட்படுத்தாமல் ஒரு பாட்டில் குளிர்ந்த நீரை தலையை உயர்த்திக்கொண்டு முகத்தில் ஊற்றிக்கொண்டிருந்தான் ஆதீஸ்வரன்.
" செவிட்டு பயலே வாயை திறந்து தொலையேன் " என்றவள் எம்பி அந்த பாட்டிலை அவனிடமிருந்து பிடுங்கி அவனின் தலையை கீழே இழுத்து அந்த தண்ணீரை அவன் தலையில் ஊற்றினாள்.
" குளிச்சி தொலை. சூரி அந்த வோசை எடு. இவனுக்கு மனசில் மன்மதன் என்று நினைப்பு. வெங்காயம். உடம்பு முழுக்க சேரும் சகதியுமா வச்சுக்கிட்டு முகத்தை மட்டும் கழுவுவதை பாரேன் மடையன், மாங்கா " என்றாள் ஆஷ்னா.
" உன் கலீஜ் வாயை கொஞ்சம் ஆப் பண்ணும. உன் கோட்டா முடிஞ்சி போச்சு. வாயா அது காவாயு " என்றான் ஆதீஸ்வரன்.
YOU ARE READING
காதலின் மாயவொளி
Romanceஇரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.