ஆதீஸ்வரன் தனுஷ்கோடியை பார்க்க, அவர் மனைவியை பார்த்தார்.
"கிளப்பில் தெரிந்தவர் முலமாக வந்தது. எனக்கு தெரிந்த பெண்மணிதான். அவருக்கு கூட ஒரு மகன் இருக்கிறான். ஆனால் அவனுக்காக ஆஷ்னாவை பெண் கேட்காமல் இவனுக்காக கேட்டார்கள். அதை பற்றி நான் கேட்டதற்கு 'என் மகனுக்கு கொஞ்சம் கெட்டபழக்கம் உண்டு' என்று சொன்னார். பெத்த மகனை யாரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அந்த பெண்மணி தன் மகனை பற்றி வெளிப்படையாக பேசியதை நம்பி நானும் இதை முழுசா நம்பினேன். " என்றார் ராஜேஸ்வரி.
அந்த பெண்மணி யாரு எவெரென்று சூர்யாவும், ஆதீஸ்வரனும் போனிலே தேடி கண்டுபிடித்த போது தனுஷ்கோடியுடன் சேர்ந்து மூன்று பேருமே அதிர்ந்து நின்றார்கள். என்றோ ஒருநாள் அடிபட்டவன் வஞ்சம் வைத்து பழிவாங்கியிருக்கிறான்.
" இந்த பொம்பளையை உனக்கு எவ்வளவு நாளாக தெரியும் " என்று கேட்டார் தனுஷ்கோடி.
" கொஞ்ச நாளாகத்தான். புதுசாதான் க்ளப்பில் வந்து சேர்ந்தாங்க."என்றார் ராஜேஸ்வரி.
" உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? இந்த பொம்பள யாருன்னு தெரியுமா? ஆஷுனாவிடம் காலேஜில் தப்பா நடக்க முயற்சி செய்து, அவனை ஆதி அடித்து ஜெயில் வரை போனானே அந்த அபினேஷின் அம்மா. திட்டம் போட்டு என் மகளின் வாழ்க்கையை நாசம் செய்திருக்கிறாங்க. நீயும் பணக்காரன் என்றவுடன் மற்ற எதையும் பற்றி விசாரிக்காம போய் இவளை தள்ளியிருக்க. நீ செய்த கலாட்டாவில் நானும் குருடன் மாதிரி இருந்து தொலைத்துவிட்டேன் " என்றார் தனுஷ்கோடி.
" பார்த்தீர்களா, இப்போதும் என் மகளின் வாழ்க்கையை கெடுத்தது இவன்தான்." என்றார் ராஜேஸ்வரி.
" அட ச்சீ அறிவு கெட்டவளே, வாயை மூடு. மூளையை வாடகைக்கு கொடுத்துவிட்டாயா? உன் பொண்னிடம் தப்பா நடந்துகொண்டவன் காலில் விழுந்து கும்பிடனும் என்று சொல்லுறியா? அப்படினா அன்னைக்கு குத்துக்கல்லாட்டம் தோரணையாக உட்கார்ந்தியே. நீ போய் அவன் காலில் விழுந்திருக்க வேண்டியதுதானே. பேசாமல் வாயை மூடிட்டு இரு." என்று சீறினார் தனுஷ்கோடி.
YOU ARE READING
காதலின் மாயவொளி
Romanceஇரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.