இனி என்னவாகும் என்ற கேள்விக்கு யாருக்குமே விடை தெரியாமல் அவளை அந்த வீட்டிலிருந்து வெளியே கொண்டுவந்தார்கள்.
தன் வீட்டுக்கு வந்து நின்ற ஆஷ்னா நடுஹாலில் நின்றுகொண்டு கண்ணீரை அடக்க முடியாமல் கொட்டிதீர்த்தாள். இதே வீட்டில் ஒரு மாதத்திற்கு முன்பாக தான் இருந்த நிலையை நினைத்து. எல்லோரும் அவளை தேற்ற வழிதெரியாமல் நிற்க
" போதும் ஆஷு. எவ்வளவு அழுவ? அழுதுகொண்டே இருந்தா பிரச்சனை தீர்ந்துவிடுமா? சுய இரக்கம் மனிதனை கொல்லும் பெரிய வியாதி. நிமிர்ந்து நில். உன்னை அடிப்பவர்கள் அடிக்கட்டும் என்று விடாமல் அடித்தால் என்னவாகுமோ என்று பின்னோக்கி போக வை. சொல்லுவது ரொம்ப சுலபம் என்று எனக்கும் தெரியும். ஆனா கண்டிப்பா இதை நீ செய்தே ஆகணும் " என்றான் ஆதீஸ்வரன் அழுத்தமாக.
அவனை திரும்பி பார்த்தவள்
"எனக்கு இங்கே இருக்க பயமா இருக்கு வருண் " என்றாள் தேம்பி கொண்டே. இதை விட சாட்டையடி எப்படி கொடுக்க முடியும் அவளை இந்நிலையில் தள்ளிய ராஜேஸ்வரிக்கு.ஆனால் கொடுக்கமுடியும் என்று காட்டினான் ஆதீஸ்வரன். ஆஷ்னா இதுவரை யாரின் முன்பும் இவனை ' வருண் ' என்று அழைத்ததே இல்லை. அந்த எண்ணமும் துணிவும் அவளுக்கு வந்தது இல்லை. இன்று அது வருகிறது என்றால் இனி இவளை அடக்கிவைக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் சொல்கிறாள்.
அவள் அருகில் போனவன் அவளை தன்னோடு அணைத்துக்கொண்டான். என்ன செய்துவிட முடியும் ராஜ ராஜேஸ்வரிக்கு.
" ஹாஸ்டல் போறியா? " என்று கேட்டான்.
" ம் " என்றாள் அவள்.
"அவளை ஹாஸ்டல் அனுப்ப நீ யாரு? " என்றார் ராஜேஸ்வரி.
" ஹாஸ்டல் அனுப்பாம நீங்க அனுப்பியது போல ஒரு பொறுக்கியிடம் அனுப்ப சொல்றிங்களா? அப்புறம் நான் இவளுக்கு யாரு? என்ன உறவு என்று உங்களிடம் விளக்கம் கொடுக்கும் தகுதியையெல்லாம் நீங்க எப்போதோ இழந்திட்டிங்க. ஒரு பெண், அப்புறம் சாரோட மனைவி என்ற இந்த இரண்டு மட்டும்தான் என்னை உங்களிடம் பேசிட்டு இருக்க வைக்குது.
YOU ARE READING
காதலின் மாயவொளி
Romanceஇரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.