அத்தியாயம் 24

2.3K 191 23
                                    

நூறு பேருக்கு மேலாக வேலைசெய்யும் அந்த சைட்டில் ஒரு ஆண் டாக்டர் இருந்தார்.

"லேடி டாக்டர் இல்லையா? " என்று கேட்டாள் ஆஷ்னா.

"அதான் நீ இருக்கிறாயே " என்றான் ஆதீஸ்வரன்.

"இதுக்குதான் என்னை அழைத்துவந்தாயா? ஆனா வேற எதுவோ காரணம் சொன்ன? நானும் அதை பேக்கு மாதிரி நம்பிட்டேன் பார். என்னை பிரிந்திருக்க உனக்கு கஷ்டமாக இருக்கு என்று தவறாக எண்ணிவிட்டேன். நீ.. "என்று படபடத்தவள் சட்டென்று அமைதியாகி தன்னையே நொந்து கொண்டாள் தான் பேசியதை நினைத்து.

அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் அவள் மீண்டும் தனக்குள் சுருண்டுகொண்டதை பார்த்து
"உன்னை பிரிந்து இருக்க முடியாமல்தான் என்னுடன் அழைத்துவந்தேன். ஆனால் வெளியே நான் இதை சொல்லிக்கொள்ள முடியாது பார். இங்கே இருந்த ஒரு பெண் டாக்டர் எமெர்ஜென்சி லீவில் போயிருக்கிறார். அவர் வரும் வரை அவரின் இடத்திற்கு நீ வந்திருப்பதாக எல்லோரும் நினைத்துக்கொள்வார்கள்."என்றான் அவன்.

"உளறாதே "என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள். அந்த இடத்தின் அமைதி, அமைப்பு எல்லாம் அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது. குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து இங்கு வேலைசெய்துகொண்டிருக்கும் அனைவருக்கும் மனதில் ஒரு வெறுமை இருந்தாலும் அந்த வெறுமையை சந்தோசமாக மாற்றிக்கொண்டிருந்தார்கள்.

பேச்சு, சிரிப்பு, கடற்கரையில் விளையாட்டு, அங்கே கிடைக்கும் உணவு பொருட்கள் என்று இருக்கும் இடத்தை சொர்க்கமாக மாற்றி அமைத்து கொண்டார்கள்.

மனிதனின் தனிச்சிறப்பு இது. இருப்பதை தனக்கு ஏற்றார் போல மாற்றி அமைத்து அதிலே இன்பம் காண்பவன். ஆனால் இது எல்லோரிடமும் இருக்காது என்று நினைத்துக்கொண்டவள் மனதில் ராணியக்கா வந்து போனாள். இவள் முகத்தில் தானாக சிரிப்பு வந்தது.

அங்கே வேலை செய்பவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்றுதான் இந்த ஹாஸ்ப்பிடல் வசதி. யாருக்காவது காயம் ஏற்பட்டால், உடல்நிலை சரியில்லையென்றால் மட்டுமே இவர்களுக்கு வேலை. மற்றபடி சும்மாதான் இருப்பார்கள். சும்மாவே இருப்பது இவளுக்கு போரடிக்க சைடில் நின்ற ஆதீஸ்வரனுடன் போய் நின்றாள்.

காதலின் மாயவொளி Where stories live. Discover now