ஆதீஸ்வரனை ஹாஸ்பிடல் உள்ளே தேடி காணாமல் பின்னால் இருந்த புல்வெளிக்கு வந்தாள் ஆஷ்னா. அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் முழங்காலில் கையை ஊன்றி குனிந்து அமர்ந்திருந்தான் ஆதீஸ்வரன்.
அவன் அருகில் போய் இருந்தாள் ஆஷ்னா.
அவளை திரும்பி பார்த்தவன்" சாரி மொசக்குட்டி. நீ இவ்வளவு ஹர்ட் ஆவாய் என்று நான் நினைக்கவில்லை. ரொம்ப சாரி. " என்றான் அவன் வருத்தத்தில்.
" பரவாயில்லை ஆதி. நேற்று எனக்கு கோபம் இருந்தது. ஆனால் இப்போ இல்லை. வா போகலாம். " என்று அவனை அழைத்துக்கொண்டு போனாள் அவள்.
" எனக்கு பைக் வேண்டாம்" என்றான் அவன்.
" கண்டிப்பா வேண்டும். உன் படிப்பு, வேலை எல்லாம் வேற, என் படிப்பு வேற. போகும் ஒவ்வொரு இடத்திற்கும் நீ பஸ், ஷேர் ஆட்டோ என்று ஏன் காத்திருக்கிறாய்? என்னால் எல்லா நேரத்திலும் வர முடியாது. பைக் புக் பண்ணிட்டேன். ஈவினிங் போய் எடுத்துக்கலாம் " என்றாள் அவள் ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு.
" ஏதோ பேசிவிட்டேன் என்பதற்கு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? எனக்கு இப்படியே பழகிட்டு. தனியால்லாம் போக முடியாது " என்றான் அவன்.
" தனியா போக பிடிக்காவிட்டால் சூரியை போல நீயும் யாரையாவது உஷார் பண்ணிட்டு டபுள்ஸ் போ. " என்றாள் அவள்.
அவளின் பிடிவாதம் இவன் அறிந்ததுதான். ஆனாலும் அதை ஏற்றுக்கொள்ள அவனால் இப்போது முடியவில்லை.
" என்னை மன்னிச்சிட்டல? " என்று கேட்டான்.
" ம் " என்றாள் அவள்.
" அப்படின்னா எனக்கு பைக்கும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம். கொஞ்ச நாள் கழித்து வாங்கிக்கொள்கிறேன் " என்றான் அவன்.
கண்ணாடி வழியாக அவனின் முகத்தை பார்த்தவள்
" சரி, சரி. அழுது விடாதே. இப்போ வாங்க வேண்டாம். ஆனால் கண்டிப்பா வாங்கணும் " என்று முடித்தாள்.அதன் பிறகு ஆஷ்னா தன்னிடம் சற்று ஒதுக்கம் காட்டுவதாக நினைத்தான் ஆதீஸ்வரன்.
YOU ARE READING
காதலின் மாயவொளி
Romanceஇரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.