விவாஹம்

58 8 32
                                    

I know this is not a part of epics Ramayanam or Mahabharatam but still this one his regarding bhagwan Vishnu's very famous srinivasan avadharam in this Kali yugam. A very short one though. And am new for typing in tamil thats why this one is very short. Forgive me for my mistakes.

ஶ்ரீமந் நாராயணன் திருவடிகளே சரணம்

''மாங்கல்யம் 

தந்துனானே மம ஜீவன 

ஹேதுனா

கண்டே பத்னாமி சுபகே

சஞ்சீவ சரதா சதம்''

இது விவாஹ மந்திரம். பெண்ணின் கழுத்தில் மங்களநாண் பூட்டும்போது சொல்லப்படும். என் ஜீவனின் நன்மைக்கு உன் கழுத்தில் இந்த மங்களநாணை பூட்டுகிறேன் என்பது இதன் பொருள். ஆனால் லோகஷேமத்துக்காக நடந்த விவாஹத்தைப் பற்றி தெரியுமோ???

வேறு எந்த விவாஹம் எல்லாம் 'ஶ்ரீனிவாஸ கல்யாணம்' தான். மனுஷ வாழ்க்கைல 4 ஆச்ரமங்கள் அதாவது 4 நிலைகள்னு கூட சொல்லலாம். 1.ப்ரஹ்மசரியம் 2.க்ருஹஸ்தாஸ்ரமம் 3.வனப்ரஸ்தம் 4.சந்யாஸம். 

இதில் 'க்ருஹஸ்தாஸ்ரமம் ' என்பது மிகவும் உயர்ந்த ஆஸ்ரமம். தன்  சுற்றத்தாரை மட்டுமல்லாது மீதி மூன்று ஆச்ரமத்தவர்களையும் உணவளித்து போற்றிக்காக்க வேண்டியது க்ருஹஸ்தனுடைய கடமை. மற்ற ஆச்ரமத்தில்  இருப்பவர்கள் அந்த க்ருஹஸ்தனுக்கு உறவினராய் இல்லாவிடினும் அவர்களுக்கு உணவளித்து இரட்ஷிக்க கடமைப்பட்டவன் க்ருஹஸ்தன். ஆகையால் அந்த ஆச்ரமம் போற்றப்படுகிறது.

 ஒருவருக்கு தானம் அளிப்பதற்க்கு மனைவியின் துணை கண்டிப்பாக வேண்டும் என்பது சாஸ்திரம். ஏன் அசுர குலத்தில் பிறந்த மஹாவலி வாமனருக்கு தானம் அளிக்க வேண்டி ஜலம் சேர்க்க மனைவியை அழைத்தானே. அது மட்டுமல்லாது யக்ஞங்களில் பொருப்பேற்று நடத்தவும் சகதர்மினியின் துணை தேவை என்று இராமாயணமும் உரைக்கிறது. இதுவே இல்லறத்தின் அவசியத்தை உணர்த்கிறது. 

தாயார் இல்லாமல் பெருமாள் கூட ஏழையாகிவிட்டதாக சொல்லுகிறது ஶ்ரீனிவாஸ புராணம். ஜகத்ரஷகனான நாராயணன் உலக ஜீவன்களுடைய நன்மைக்கும் அனைத்து ஜீவன்களுக்கம் விவாஹத்தின் பெருமையையும், க்ருஹஸ்தாஸ்ரமத்தின் அவசியத்தையும் உணர்த்த நடந்த அற்புத விவாஹமே ஶ்ரீனிவாஸ கல்யாணம். 

கலியுகத்தில் வேங்கடவன் மிகுந்த ஏற்றம் பெற்றவன். லோக நன்மைக்கு உகந்த ப்ரதாண தர்மத்தை அவனது ஶ்ரீனிவாஸ அவதாரத்தில் தன்னுடைய அற்புத விவாஹம் மூலம் எடுத்து காட்டுகிறான் பகவான். 

விவாஹத்தில் மங்கலநாண் எனப்படும் திருமாங்கல்யம் அணிவித்தல் பண்டைய பழக்கம் இல்லையென்றும் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் வந்தது என்றும் சொல்லப்படுகிறது. பாணிக்ரஹணம் எனப்படும் கன்யாதானமும் சப்தபதியுமே முக்கியம் என்பதும் உண்மையே. ஆனால் இந்த அற்புத ஶ்ரீனிவாஸ விவாஹத்தில் ஒருவேளை அந்த பழக்கம் இருந்து இருந்தால் அந்த விவாஹ மந்திரம்....

''மாங்கல்யம்

தந்துனானே ஜகச் ஜீவன

ஹேதுனா''

என ஒலிக்கப்பெற்றிருக்குமோ!!!!!!!

ஶ்ரீமந் நாராயணன் திருவடிகளே சரணம்

Talks of epics.....Where stories live. Discover now