மாமா நீ மட்டும் போதும்.. KO..8

191 36 5
                                    

🔱யின்
🌀காதல் ஓவியம் 🌀
(கள்வனும் காவலாளியும்)
(week end story )

🌹ஓவியம்..8️⃣

மணி : அப்படி என்ன அந்த இந்து... உங்களை கொடுமை படுத்துவாங்க...

கீதா : இரு சொல்றேன்...சரியா ஐந்து மணிக்கு எந்திரிக்கணும்... வீட்டில இருக்குற எல்லா வேலையையும் செய்யனும் அப்படி இப்படின்னு ஆயிரத்தெட்டு கண்டிஷன் அது வீடு மாதிரியே இருக்காது....மிலிட்டரி கிரவுண்ட் மாதிரி இருக்கும்... இப்படி இருந்துகிட்டே இருக்கும் போது தான் இந்துவின் பெரிய தம்பி பாண்டிக்கு என்னுடைய அக்கா லட்சுமியை கல்யாணம் பண்ணி வெச்சாங்க.....என் பாண்டியன் மாமா தங்கமான மனுஷன்....அவரு என் அக்கா லட்சுமியை நல்லா பாத்துக்கிட்டாரு...ஆனால் என் அக்காவின் கெட்ட நேரம் பிரசவத்தில் என் அக்கா இறந்து ட்டாள்... அவ இறந்த உடனே அவளுடைய குழந்தை கதிரை நான் தான் வளர்த்தேன்... அதுக்கு நடுவுல மறுபடியும் இந்து மாசமாய் இரண்டாவதா பெண் குழந்தை ஷாமிளின் னை பெத்தாங்க....அதுக்கப்புறம் அந்த வீட்டில எப்ப பாரு அவங்க குழந்தையை பார்த்துக்கொள்ளாமல் நான் கதிரை பாத்துக்கிறேன்னு சண்டை வந்துகிட்டே இருக்கும்....நான் அதை காதில் வாங்கிக்க மாட்டேன்....இப்படியே இருந்துக்கிட்டு இருக்கும் பொழுது.... மறுபடியும் இந்து இதோ முல்லை இருக்கிறாள் பாரு இவளை வயத்துள்ள சுமக்க ஆரம்பிச்சாங்க... அப்பதான் அவங்க...அவங்களோட சின்ன தம்பி பழனி... என்னை விரும்புவதாக சொல்லி எனக்கும் அவருக்கும் கல்யாண பேச்சு ஆரம்பித்தது... ஆனால் நான் என் கதிரை பார்த்ந்துகொள்ளணும் என்பதற்காக யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தேன்.....கதிருக்கு மூணு நாலு வயசு இருக்கும்போது கதிர் துறுத்துருன்னு இருப்பான்...அவன் யார் பேச்சையும் கேட்கவே மாட்டான்... அதுவும் இந்துவ கண்டாலே அவனுக்கு பிடிக்காது...அவன் விளையாடி கொண்டு இருக்கும் போது பக்கத்துல இருக்கிற எண்ணெய் பாட்டில் கீழே விழுந்து அதில் இந்து வழுக்கி விழுந்து முல்லை குறைபிரேசவத்தில் பிறந்ததால் இந்துக்கு கதிர் மேல இன்னும் ரெண்டு கோவம் வந்துச்சு....கதிரை அவங்களுக்கு சுத்தமா பிடிக்காமல் போச்சு... இப்படியே வருஷங்கள் ஓடிக்கிட்டு இருந்துச்சு... ஆனா முல்லையை சின்ன வயசுல இருந்தே கதிருக்கும் எனக்கும் ரொம்ப பிடிக்கும்... அதுக்கு காரணம் அவ குழந்தையாக பிறந்த உடனே முல்லை தான் உனக்கு பொண்டாட்டின்னு நான் என் அண்ணன் சந்திரன் எல்லாரும் அவனுக்கு சொல்லி சொல்லி வளர்த்தோம்... நான் கதிர் மேல ரொம்ப பாசமா இருந்தது இந்து உடைய தம்பி பழனிக்கு பிடிக்கல.... எனக்கும் பழனிக்கும் சீக்கிரம் கல்யாணம் நடந்தாகனும் என்று முடிவு பன்னி.... அன்னைக்கு எனக்கும் அந்த வெள்ளை உளுந்து பழனிக்கும் கல்யாண ஏற்பாடு நடந்தது...அப்போ  கதிருக்கு 13 வயது முல்லைக்கு 8வயது இருக்கும்...

🔱யின் ❤காதல் ஓவியம்❤km💛kc Story Where stories live. Discover now