💖51💖

1.4K 46 16
                                    

கண்களில் கண்ணீருடன் எங்கோ வெறித்த வண்ணம் இருந்த ஆனந்தியை பார்க்க அரவிந்துக்கு வருத்தமாக இருந்தது.

அவள் உள்ளங்கையை எடுத்து தன் கையில் வைத்தவன்,  "ஆனந்திமா, இது நடக்கணும்னு இருந்தா அத யாராலயும் மாத்த முடியாது. நீ தேவையில்லாம நீ தான் காரணம் னு நினைச்சு உன் மனசை குழப்பிக்க வேண்டாம். மணிய இந்த நிலைமைக்கு ஆளாக்குனவங்கள நான் சும்மா விட மாட்டேன். என்னை  நம்பலாம். மணிக்கு எதுவும் ஆகாது."

"நான் அடம் பிடிச்சதால தானே இப்படி ஆச்சு. நான் ஒருவேளை வெளியே வராமல் இருந்திருந்தால் மணிக்கு ஒன்னும் ஆயிருக்காது தானே."

"அப்படின்னு சொல்ல முடியாது. எங்களுக்கு கண்ணுக்கு தெரியாம ஆயிரம் எதிரிகள் இருக்கலாம். சிதம்பரம் இல்லன்னா வேற யார் கிட்ட கூட எங்களுக்கு ஆபத்து இருக்கலாம். அதனால நீ எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத. நீ இவ்ளோ பதட்டபடுறன்னு தெரிஞ்சா மணி ரொம்ப வருத்தப்படுவான்.

முதல்ல இந்த காபி குடி.நாம போய் மணிய பார்க்கலாம்." என கூறியவன், ஆனந்தி காபி குடித்ததும் அவளை அழைத்துச் செல்ல வழியில் வந்த தாதி பெண்ணொருத்தி அரவிந்த்தை டாக்டர் அழைப்பதாக கூறினாள்.

" ஆனந்தி மா நீ உள்ள போய் மணியை பாரு. நான் டாக்டரை பாத்துட்டு வரேன்." என சென்று விட்டான்

"சரி மாமா." என மணியின் அறை நோக்கி சென்றாள், ஆனந்தி.

மணியின் அறைக்கதவை திறக்க ஆனந்தியின் கண்களிரண்டும் பெரிதானது.

"நடத்துடா நடத்து. இது என்ன ஹாஸ்பிடல் நினைச்சியா? இல்ல பார்க்னு நினைச்சியா?"

என்ற ஆனந்தியின் கேள்விகள் மணியின் தோளில் சாய்ந்து  இருந்த சாதனா வெடுக்கென எழுந்து நின்றாள்.

"அது .... அது வந்து ....அண்ணி ...."என சாதனா விலக முயல சாதனாவை முறைத்தான், மணி.

அவளின் முறைப்பின் பொருளை உணர்ந்த பின், " அது அக்கா ...." என அண்ணியிலிருந்து அக்காவிற்கு மாற்றிக்கொள்ள, இவர்களின் கண்களையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஆனந்திக்கு புசுபுசுவென இருந்தது.

நீயே என் ஜீவனடிWhere stories live. Discover now