💖40💖

4.7K 232 54
                                    

கண்களில் கண்ணீருடன் சிலை என இருந்த ஆனந்தியை பார்த்து பயந்த மருதமுத்து அவள் அருகே சென்று ஆனந்தியை உலுக்கினார்.

"ஆனந்தி.... ஆனந்தி... என்னமா ஆச்சு?" என்ற அவரின் குரலில் சுயநினைவு வந்தவள் அவரை அணைத்து தேம்பித்தேம்பி அழுதாள்.

"இங்க பாரு ஆனந்திமா, ஏன்டா இப்படி அழுகுற. இங்க பாருமா. அப்பாக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா. அழாதமா." என அவள் முகத்தை  நிமிர்த்தினார்.

"ஏம்பா கடவுள் எங்க வாழ்க்கைல இப்படி விளையாண்டாரு" எனக்கேட்டவள், தன் அழுகையை ஒரு நிமிடம் நிறுத்தி அவர் அணைப்பில் இருந்து வெளிவந்து அவர் முகம் பார்த்து, "உங்கள அப்பான்னு கூப்பிடலாம்ல ."என கேட்க மருதமுத்து நொருங்கிவிட்டார்.

"ஏன்டா அப்பாவை பார்த்து இப்படி கேக்குற? நீ இந்த உலகத்துக்கு வர காரணமா வேணா சிவனேசன் இருக்கலாம். உன் மூனு வயசு வரை தன்னோட  கைக்குள்ள  பொத்திப் பாதுகாத்தது அரவிந்த் தம்பியா இருக்கலாம். ஆனால் இந்த 15 வருஷமா ஒன்ன என் தோளில் சுமந்து உன்னை என் பொண்ணா பார்க்குறேன். நீ என் பொண்ணுடா எப்பவும். அப்பா உனக்கு எதில் குறை வைத்தேன். அப்புறம் ஏண்டா இப்படி எல்லாம் கேட்கிற." என அவர் கண் கலங்க அவரை அணைத்து "சாரிப்பா." என அழுதாள்.

நிலைமையை சீராக எண்ணி ராம் ஆனந்தியின் அருகே வந்து , "ஆனந்தி கண்ணுல தண்ணி.  நம்ப முடியலையே. எப்பவும் ஆனந்தியால தான் மத்தவங்க கண்ணீர் வடிப்பாங்க.இப்ப உல்டாவா இருக்கு." என சீண்டினான்.

"ஏன்டா என் புள்ளையா சீண்டுற?" மருத முத்துவின் மனைவி பர்வதம் ராமின் முதுகில் விளையாட்டாய் ஒரு அடி அடித்துவிட்டு ஆனந்தியை அணைத்துக்கொண்டார்.

அவர்களின் பாசத்தை உள்ளுக்குள் ரசித்தாலும் "நீங்க  அவள மட்டும் நல்ல கொஞ்சுறீங்க. இங்க என்னை மட்டும் அடிக்கிறீங்க." என மீண்டும் சீண்டினான்.

"அதுக்கெல்லாம் முக லட்சணம் வேணுமடா ராமண்ணா." என ஆனந்தி அவனை வெறுப்பு ஏத்தினாள்.

நீயே என் ஜீவனடிWhere stories live. Discover now