💖48💖

6K 216 45
                                    

தன் அருகே கேட்ட அந்த குயிலின் குரலில் புன்னகை முகத்துடன் கண்களை திறந்த அரவிந்த்  தன் கண்களை நம்ப முடியாமல் கசக்கி கொண்டு இருந்தான்.

மீண்டும் அந்த குயிலின் கீதம் அவன் காதில் ஒலித்தது.

"ஆரு மாமா,  கீஸர் போட்டுருக்கேன் சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க. நான் உங்களுக்கு டீ போட்டு வரேன்."

  ஆனந்தியின் குரல் கேட்க தன் அருகே இருந்த படுக்கையை பார்த்தான்.

மெத்தையில் அவன் மட்டுமே இருக்க அப்போதுதான் இது கனவில்லை நிஜம் என்பதை உணர்ந்தான்.

இன்னும் அதை நம்ப முடியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தான்.

"மாமா, என்ன ஆச்சு? ஏன் இப்படி பாக்கறீங்க? சீக்கிரம் எழுந்திருங்க." என அவன் கையை பிடித்து இழுத்தாள்.

"ஆனந்தி நீ எப்படி இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்ச?. அதுவும் மணி நாலு தான் ஆகுது."

"அதெல்லாம் அப்படித்தான்.  முதல்ல போய் குளிச்சிட்டு வாங்க." என குளியலறைக்குள் தள்ளிவிட்டாள், ஆனந்தி.

ஏதோ ஒன்று ஆனந்தியின் மூளையில் ஓடுகின்றது என்பதை புரிந்து கொண்டாலும் அது என்னவென்றுதான் யோசிக்க முடியவில்லை.

டவலுடன் குளியலறையிலிருந்து வெளியே வர அவன் அணிந்து கொள்ள சட்டையும் வேட்டியும் ரெடியாக இருந்தது.

யோசனையுடனே ஆனந்தி எடுத்து வைத்த உடைகளை அணிந்துகொண்டு திரும்ப ஆனந்தி அவன்முன் டீயுடன் நின்றிருந்தாள்.

அவள்  கண்களை ஊடுருவி எதற்காக என யோசித்துக்கொண்டே டீயை குடிக்க அப்பொழுதும் எதுவும் பிடிபடவில்லை.

ஒருவேளை அதுவாக இருக்குமோ அவ்வாறு இருந்தால் நிச்சயம் மறுத்து விட வேண்டும் என எண்ணிக்கொண்டே ஆனந்தியை தாண்டி கூடத்திற்கு சென்றான்.

அவன் செல்வதை பார்த்து அவன் பின்னே ஆனந்தியும் ஓடி வந்தாள்.

அவள் ஓடி வருவதைப் பார்த்து நின்ற அரவிந்த் அவளிடம் திரும்பி, "ஆனந்திமா, உனக்கு என்ன ஆச்சு? நீ எதுக்கு இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சு இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க.

நீயே என் ஜீவனடிWhere stories live. Discover now