💖28💖

8.2K 262 94
                                    

"போதும் அத்தை. என் வயிறு பெருசாயிடுச்சு. இதுக்கு மேல சாப்பிட முடியாது." வயிற்றைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினான், அரவிந்த்.

" அவ்ளோதான். இன்னும் ஒரே ஒரு வாய்."

" இப்படி சொல்லி சொல்லியே எம்புட்டு வாய் ஊட்டி விடுவீங்க." என்றான், சிணுங்கியபடி.

"விடு தாயி. அவன்தான் போதுமுன்னு சொல்லுதான்ல. நீ சாப்பிடு தாயி. அந்த மீனை எடுத்து லட்சுமிக்கு வை மஞ்சு."

" சரிங்க "என்றவாறே சிதம்பரத்தின் ஆணைக்கு இணங்க மூன்று துண்டு மீன்களை அடுக்கி வைத்தாள்.

" போதும் அண்ணி. அட நீ சாப்பிடு புள்ள.வயசு புள்ள நல்லா சாப்டா தான் ஆச்சு." என்றாள், மஞ்சு உண்மையான அக்கறையுடன்.

மஞ்சுவுக்கு எப்போதும் மகாலட்சுமி மேல் ஒரு தனி பாசம் இருக்கும். அவளை தன் சகோதரி போல்தான் நினைத்தாள்.

" நானும் வயசு பையன் தான். என்னையும் கொஞ்சம் கவனிக்கலாமே. ரொம்ப பசிக்குது." என்றவாறு அங்கு வந்து அமர்ந்தான், சிவபெருமான்.

" ஏன்டா, இன்னைக்கு தான் அம்மா பறக்கிறது நடக்கிறது ஓடுறதுன்னு எல்லாத்தையும் பொங்கி வைச்சுருக்குமே. ஏன் அங்கே போய் சாப்பிடறது தானே." அவளை ஒரு முறை பொய்யாய் முறைத்து பின் சலிப்புடன் ,

"ஆமாம் எல்லாம் எனக்காக பொங்கி வச்சிருக்கு பாரு. போய் வெளுத்துக் கட்ட . எல்லாம் அவ செல்ல பிள்ளைக்காக பண்ணி வச்சிருக்கு. அவன் மிச்சம் வச்ச தான் என் கண்லயே காட்டும்."

" என்னலே சொல்லுற .சிவனேசன் நாளைக்கு வரதா தானே கடதாசியில போட்டிருந்தான்."

சிவனேசன் பற்றி பேச ஆரம்பித்த போதே மகாலட்சுமியின் கன்னங்கள் சிவப்பேற ஆரம்பித்தன.

இதழில் புன்னகையும் இதயத்தில் படபடப்பு கூடிப்போனது. மனதில் அவனைப்பற்றிய எண்ணங்கள் கோலமாக பின்னி விட தட்டிலும் கோலமிட்டுக் கொண்டிருந்தாள்.

" அப்படி தான் மாமா கடுதாசி வந்தது. அவங்க தோஸ்து யாரோ முத்துவை பார்க்கப் போவதாகவும் பார்த்துட்டு நாளைக்கு வரவும் இருந்தது.

நீயே என் ஜீவனடிWhere stories live. Discover now