Episode 12

113 5 1
                                    

ருத்ரனும் நயனாவும் ருத்ர தேசத்தின் விருந்து உபசரணைகளில் பூரண மகிழ்ச்சி கொண்டனர்,தனக்காக ஒதுக்கப்பட்ட அறையில் எதையோ சிந்தித்தவாறு சோகமாக அமர்ந்திருந்தாள் நயனா

அங்கு வந்த ருத்ரன் அவள் முகத்தில் உள்ள சோகத்தை கவனித்தான்,.....அவள் அருகில் சென்று அமர்ந்தான்,"ஏன் இந்த சோகம் நயனா?..."அக்கறையோடு கேட்டான்

ருத்ரன் வந்ததையே அவள் இப்போது தான் கவனித்தாள்,ருத்ரன் மீண்டும் பேசினான்,....."அரசர் ரகுபதி சந்திராவிடம் தோற்றுவிட்டதால்,சோகமாக இருக்கிறாயா?...."

அவனை பார்த்து அமைதியாக புன்னகைத்தாள் நயனா,"இல்லை ருத்ரா,தோல்வியால் ஏற்பட்ட வேதனை எப்போதோ என்னைவிட்டு சென்றுவிட்டது,உலகின் தோல்வி காணாத பதினாறு அரசர்களை வென்றதால்,என்னை யாராலும் வெல்ல இயலாது என எண்ணியிருந்தேன்,அந்த ஆணவம் தான் என்னுடைய பலவீனமாக மாறியது...........அரசர் ரகுபதி சந்திரா என்னை வென்று விட்டதால்,என் ஆணவம் அளிந்தது,என் பலவீனமும் தொலைந்தது......."பக்குவபட்டவள் போல பேசினாள் நயனா

"அப்படி என்றால்,எனக்கும் உனக்கும் இடையேயான நிபந்தனையில் தோற்றது தான் உன் வேதனைக்கு காரணமா?...."ருத்ரன் கேட்டான்

"உனது வெற்றி என்றும் எனக்கு வேதனை அளிக்காது ருத்ரா.....நீ வெற்றி பெறுவதற்காக நான் எத்தனை முறை வேண்டுமானாலும் தோற்பேன்,தோல்வியை பற்றிய எண்ணமே எனக்குள் இப்போது இல்லை"சாந்தமாக எடுத்துரைத்தாள்

குழப்பத்தோடே சிந்தனையில் ஆழ்ந்தான் ருத்ரன்.......பின் மெல்ல பேசத்துவங்கினான்,"உனது வேதனைக்கு காரணம் எதுவாக இருந்தாலும்,அதை நான் சரி செய்துவிடுவேன்,ஆனால்..............
திருமணம் தான் காரணம் என்றால்,என்னால் எதுவும் செய்ய முடியாது,கூடிய விரைவில் உன் திருமணத்தை நான் நடத்தியே தீருவேன்,அதை யாராலும் தடுக்க முடியாது"ருத்ரனின் பேச்சில் ஒரு உறுதி வெளிப்பட்டது

அவனை பார்த்த நயனா,சலிப்போடே பெருமூச்சு விட்டாள்...,"இதுவரை நடந்த அனைத்தும் தாய் பவானியின் விருப்பம் என்று எண்ணி மனதார ஏற்றுக்கொண்டேன்........அதுபோலவே,இனி நடக்க இருப்பதையும்,தாயின் விருப்பம் என மனதார ஏற்க,தயாராக இருக்கிறேன்......ஆகையால் என் திருமணம் குறித்த கவலையை விட்டுவிடு ருத்ரா...."

ராமநயனம் Where stories live. Discover now