Episode 110

148 4 1
                                    

ராம் கூறியவண்ணமே அனைவரும் டெல்லிக்கு புறப்பட்டனர்......மாதம் மூன்று முடியும் தருவாயில் இருந்தது....சீதா இப்போது நிறைமாத கர்பிணி.......

அந்த ஒற்றை வீட்டின் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தாள் சுகுணா......

சீதாவின் அருகில் அமர்ந்து பழச்சாறு பிழிந்து கொண்டிருந்தான் சந்துரு.....சீதாவும் சற்று கொழுத்துபோயிருந்தாள்......

"எப்படா இவரு வருவாரு....."எதிர்பார்ப்போடே கேட்டாள் சீதா

"அதான் இன்னைக்கு வந்துடுவேன்னு சொன்னாருல்ல.....என் அண்ணன் சொன்னா சொன்னத செய்வாரு....."சந்துரு கூறிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தான் ராம்.....

உற்சாகமாக எழுந்து அவனிடம் ஓடினாள் சீதா.....

"பாத்து......ஏன் இவ்ளோ வேகமா நடக்குற....."கனிவாகவே கடித்தான் ராம்

"அதெல்லாம் எனக்கு ஒண்ணும் ஆகாது......ஒண்ணுக்கு ரெண்டு பாடிகாட் இருக்கீங்களே....."புன்னகையோடே சீதா கூற,செல்லமாய் முறைத்தான் ராம்

"உன் புருஷன் இவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணி வந்துருக்காரு.....அவருக்கு ஒரு ஜீஸாச்சும் போட்டு குடு......"தான் பிழிந்த பழச்சாற்றை தானே பருகியவாறு கூறினான் சந்துரு

அவனை முறைத்தவாறு நோக்கினாள் சீதா.......

"சரி...முறைக்காத....அவரையே பிளிஞ்சு குடிக்க சொல்லு....."என்று கூறிவிட்டு ஜீஸை குடித்தவாறே தன் அறைக்கு நகர்ந்தான் சந்துரு.....அவனை எண்ணி மெல்ல சிரித்தான் ராம்

"நீ வா.....நான் உனக்கு ஜீஸ் போட்டு குடுக்குறேன்......"ராம் கூற,தலையாட்டியவாறே அவன் நெஞ்சில் சாய்ந்து இறுக பற்றிக்கொண்டாள்

அன்றிரவு மிகவும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் சீதா,ராமின் அருகாமையால்......அவனும் நன்கு தூங்கிக்கொண்டு தான் இருந்தான்

அவனது கனவில் சீதா செல்லும் கார்,விபத்துக்குள்ளானது......வேர்த்து விருவிருக்க பதறி எழுந்தான்.....

அருகில் சீதா நிம்மதியாக உறங்கி கொண்டிருப்பதை பார்த்து சற்றே நிம்மதி பெருமூச்சுவிட்டான்......

ராமநயனம் Where stories live. Discover now