Episode 42

77 4 0
                                    

"ஒருவேளை நயனா இன்று உன்னை வென்றுவிடலாம் ரகுபதி....."மாதவன் கூறினான்....அவன் முகத்தில் ஒரு புன்னகை தென்பட்டது......அதன் பொருள் புலப்படாதவனாய் நயனாவை நோக்கி நடந்தான் ரகுபதி

"நயனா....நீ ஏற்கனவே மாதவனோடு போரிட்டுள்ளாய்,ஆகையால் உனக்கு ஓய்வு தேவைபட்டால்...தாராளமாக ஓய்வெடுத்து விட்டு என்னோடு வாட்போர் செய்யலாம்......"கனிவாய் கூறினான் ரகுபதி

"இல்லை.....உங்களை ஒருமுறை இந்த வாட்போரில் வென்றுவிட்டால்.....உலகின் தோல்வி காணாத அனைத்து அரசர்களையும் வெல்வேன் என்ற,என் சபதத்திலும் நான் வென்று விடுவேன்,ஆகையால்   அதுவரை,என் வாளுக்கு ஓய்வென்பதில்லை.......இப்போது நீங்கள் வாளுயர்த்தி வரலாம்......"நயனாவின் குரல் கர்ஜனையாகவே ஒலித்தது

சிறுபுன்னகையோடே வாளை உயர்த்தினான் ரகுபதி.......வழக்கம்போல் வாட்சண்டை தொடங்கியது,நேரம் செல்ல செல்ல வாள்வீச்சின் வேகமும் வேகம் கொண்டது⚔️

மாதவனோ என்றுமில்லாமல் இன்று,அத்தனை ஆர்வமாக வாள்வீச்சை கவனித்துக் கொண்டிருந்தான்,.....அதன் காரணமாக கண்ணிமைக்கவும் மறந்துவிட்டான்.......

போட்டியின் கடுமை அதிகரிக்க....நயனா சற்றே சோர்வடைய தொடங்கினாள்,ஆனாலும் சளைக்காமல் போரிட்டாள்.....ரகுபதியும் முழு வலிமை கொண்டு போரிட்டான்......நிறைவில் தன் சோர்வையும் தகர்த்தெறிந்தவாறு...

"ஜெய் பவானி🔥...."என்ற முழக்கத்தோடு,ரகுபதியை வென்று விட்டாள் நயனா....நயனா தன் சபதத்தை நிறைவேற்றிவிட்டாள்.....

தன் கையிலிருந்து நழுவிய வாளை பார்த்தவாறு,.....தரையில் விழுந்திருந்தான் ரகுபதி

மீராவின் புருவம் ஆச்சரியத்தில் உயர்ந்தது....மாதவனின் முகம் ஆனந்தத்தில் மலர்ந்தது💗......

உண்மையில் ரகுபதியாலேயே இதை நம்ப முடியவில்லை......லேசான அதிர்ச்சியோடு நயனாவை பார்த்தவன் ,அப்படியே திரும்பி மாதவனை பார்த்தான்.....மாதவனோ புன்னகைத்து நின்றான்......

வெற்றி பெற்றிருந்த போதிலும்,சோர்வின் காரணமாக....சற்று தள்ளாடியவாறே நின்றாள் நயனா

ராமநயனம் Where stories live. Discover now