Episode 22

98 7 5
                                    

"நீங்கள் இருவரும் இங்கு தான் இருக்கிறீர்களா?...... விருந்து உண்ணும் நேரம் நெருங்கிவிட்டது, ருத்ரதேசத்தின் மருமகளாக நயனா அக்காவுக்கு இன்று முதல் நாள், ஆகையால் பெரும் விருந்து தயார் செய்யப்பட்டுள்ளது ...........நீங்கள் இருவரும் இங்கு நின்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?..... ,உடனே என்னோடு வாருங்கள்,அனைவரும் உங்களுக்காக தான் காத்துக்கொண்டிருக்கிறார்கள்......"
எனறு குரல் கொடுத்தவாறு அங்கு வந்தாள் மீரா

அவளை கவனித்த நயனா"என் கணவரின் கடந்த காலம் பற்றி சேனாதிபதி எடுத்துரைத்து கொண்டிருந்தார்..... நானும் அதை கேட்கும் ஆர்வத்தில் சமயம் போனதை மறந்து விட்டேன்...." நயனா கூற

"மாமா ரகுபதியின் கடந்தகாலம் பற்றி என் கணவரை விட,எனக்குத்தான் அதிகம் தெரியும்....... ஆகையால் நானே அதை உங்களுக்கு கூறுவேன்" என்று சற்று கர்வத்தோடு மீரா கூற

லேசாய் சிரித்தவாறு அவளுக்கு பதிலுரைத்தான் மாதவன், "ரகுபதியின் கடந்த காலத்தை பற்றி என்னைவிட நீ அதிகம் அறிந்திருக்கலாம்...., ஆனால் அவனது மனதை அறிந்தவன் என்னை தவிர வேறு யாரும் இல்லை....."என்று உரைத்தவாறு,நயனாவை நோக்க......

மாதவனின் குறிப்பறிந்த நயனா "இனி வரும் நாட்களில் என் கணவரின் மனதை உங்களை விட சிறப்பாக நான் அறிந்து கொள்வேன்.... இது என் சவால்....."என்று உறுதியோடு உரைத்தாள்

அதே புன்னகையோடு "சரி பார்க்கலாம்..... இப்போது உணவருந்த செல்லலாமா?....." என்று மாதவன் கேட்க அனைவரும் உணவருந்தும் இடம் நோக்கி நகர்ந்தனர்

சுவையான உணவோடு அன்பு நிறைந்த நெஞ்சங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கூடி, விழாக்கோலம் காணும் போது.......அந்த இடத்தின் மகிழ்ச்சியை கூற வார்த்தைகளே இல்லை.......

ஆனால் நயனாவின் மனதோ, ருத்ரன் உணவருந்தி இருப்பானோ என்னவோ....... என்ற எண்ணத்தோடு பவானி புரியை சுற்றிக் கொண்டிருந்தது

ருத்ர தேசத்தில் கோலாகலமே எங்கும் நிறைந்திருந்தது

பவானிபுரியோ...... பெண்ணை பெற்றவரின் இல்லமாய் புகுந்த வீடு சென்ற தன் மகளையே எண்ணியிருந்தது........அந்த எண்ணம் ருத்ரனின் கண்களில் வற்றாத நீராய் தனிமையில் வடிந்து கொண்டிருந்தது

ராமநயனம் Where stories live. Discover now