Episode 62

75 3 2
                                    

மதியவேளை ஆனது,மணியும் ஒலித்தது......சந்துரு வரவில்லை.....கல்லூரி மைதானத்திற்கு அருகில் உள்ள மைதானத்தின் இருக்கையில் தனிமையில் சென்று அமர்ந்துகொண்டான் மோகித்......ஆயிரம் எண்ணங்கள் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தன.....

"மோகித்......"உதயாவின் குரல்.....ஆனால் மோகித்தால் அதை நம்பமுடியவில்லை,இத்தனை கனிவாக அவள் அவனை அழைத்ததே இல்லை.....மிகுந்த எதிர்ப்பார்ப்போடு அவளை திரும்பி பார்த்தான்.....

சற்றே தயக்கத்தோடு மெலிதான புன்னகையும் அவளிடம் வெளிப்பட்டது......

"என்னையா கூப்ட?...."மோகித் கேட்டான்

"அ...ஆமா...உன்ன தான் கூப்டேன்....காலைல இருந்து ஒரு மாதிரி சோகமா இருக்க....என்னாச்சு?....சந்துரு எங்க?...."ஏதும் அறியாதவள் போல் தந்திரமாய் பேசினாள் உதயா

ஆனால் உதயா பேசும் விதத்திலிருந்தே.....இது சந்துருவின் யோசனையாக இருக்குமோ????என்ற யோசனை அவனுக்குள் துளிர்விட தொடங்கியது....எனினும்,உதயா தன்னிடம் அன்பாக பேசும் அந்த நொடிகளை தவிர்க்க அவனுக்கு விருப்பமில்லை.....அவ்விதமே பேச்சை தொடர்ந்தான்.....

"சந்துருவுக்கும் உனக்கும் எதாச்சும் பிரச்சனையா?....."உதயா கேட்டாள்

உதயாவின் தந்திரத்தை உணர்ந்தவனாய் புன்னகை செய்தான் மோகித்......உதயா சற்றே தடுமாறினாள்....

"இல்ல....சீதா தான் கேக்க சொன்னா....அதான் கேட்டேன்...."உதயா சமாளித்தாள்

"எப்பவும் என் மேல எரிஞ்சுவிழுற நீ....இப்டி எங்கிட்ட பேசுறது...ரொம்ப சந்தோஷமா இருக்கு.....ஆனால்,இதெல்லாம் வெறும் நடிப்புன்னு நினைக்கும்போது தான் மனசுக்கு அவ்ளோ வலிக்குது....😟"மோகித்தின் வேதனை அவன் கண்களில் வெளிப்பட்டது

"ந...நடிப்பா...நீ என்ன சொல்ற"உதயா நடுக்கம் கொண்டாள்

"நான் அவ்ளோ பெரிய முட்டாள் இல்ல மீரா.....சந்துரு தான் உன்ன எங்கிட்ட அனுப்பி வச்சுருப்பான்னு எனக்கு தெரியும்......"

உதயாவிடம் பதில் இல்லை.....தலைகுனிந்து நின்றாள்

சலிப்போடே புன்னகைத்தவன்😏......"ஒரு காலத்துல நான் தான் உனக்கு உலகம்....இப்போ என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியல.....ரகுபதிய பத்தி என் மூலமா தெரிஞ்சுக்க வாய்ப்பே கிடையாது....போய் சந்துரு கிட்ட சொல்லு....."சற்றே இறுக்கமாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் மோகித்

ராமநயனம் Where stories live. Discover now